பக்கம் எண் :

814
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- நான்காவது பாகம் - கர்நாடக சங்கீதத்தின் சுருதிகள்

ஒருமாதத்திற்கு 60ரூபாய் வரும்படியுள்ள ஒருவன் 30ரூபாய் செலவுசெய்ய 30ரூபாய் மீத்துவைப்பான் என்றும் 70 ரூபாய் செலவுசெய்கிறவன் 10 ரூபாய் கடனுக்குட் படுவானென்றும் அறிவோம். இது போலவே ஒரு நாளைக்கு 21,600 சுவாசமாக 120 வருடம் ஆயுள் பெற்ற ஒரு மனிதன் ஒரு நாளுக்கு 21,600 சுவாசத்திற்கு மேற்பட்டு சுவாசித்தால் ஆயுள்குறையு மென்றும் அதுவன்றி 21,600 சுவாசத்தித்றகுக் கொஞ்சம் குறைத்து சுவாசிக்கப் பழகிக்கொண்டால் எத்தனை சுவாசம் மீதம் பண்ணிக்கொண்டானோ அக்கணக்கின்படி ஆயுள் நீடித்திருக்கு மென்றும் நம் பெரியோர்கள் சொன்னார்கள். “கலை குறையில் நாட்குறையும் கருத்தோணாதோ” என்று எச்சரித்து மிருக்கிறார்கள். மேலும் சூரியகலையில் 16 அங்குல சுவாசம் வாங்கி 12 அங்குல சுவாசம் விடுவதினால் 4 அங்குல சுவாசம் மிச்சமாகிறதையும் சந்திரகலையில் பன்னிரண்டு அங்குல சுவாசம் வாங்கி 16 அங்குல சுவாசம் விடும்பொழுது 4 அங்குல சுவாசம் செலவழிந்து போகிறதையும் நுட்பமாய் அறிந்து வலது நாசியில் சுவாசம் ஓடும்படி செய்ய வேண்டுமென்ற கருத்துக்கிணங்க “மதியை வலத்தில் திருப்பியே விடு மறவாமல்” என்றும்

உரோமரிஷி சூத்திரம் 100 பாடல் 81.

“வாரான மதியமிர்தம் பீரிட்டோடி வருகுதென்று சிறிதுஜனம் மாண்டார் ஐயா
நீரேது நீர்குடிக்க ஆறங்கேது நினைவுகெட்ட தோசிகளே நிறுத்திப்பார்க்க
கூரான சந்திரனில் நாலேமிச்சம் குடிக்கிறதும் பிடிக்கிறதும் அதுதான் ஐயா
சீரான மேல்வாசல் தமருக்குள்ளே சிங்குவைநா லங்குலமுஞ் செலுத்திடாயே”

உரோமரிஷி சூத்திரம் 100 பாடல் 72.

வாங்கியந்த பன்னிரண்டி னுள்ளே ரேசி
வன்னி நின்ற விடமல்லோ ரவியின் வாழ்க்கை
யோங்கியிந்த ரெண்டிடமு மறிந்தோன் யோகி
உற்றபர மடிதானே பதினா றாகுந்
தாங்கி நின்ற காலடிதான் பன்னிரண்டு
சார்வான பதினாறில் மெள்ள வாங்கி
யேங்கினதைப் பன்னிரண்டில் நிறுத்தி யூது
எழுந்தபுரி யட்ட மடங் கித்துப் பாரே.

என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

இதில் “உற்ற பரமடிதானே பதினாறாகும் தாங்கி நின்ற காலடிதான் பன்னிரண்டு’ என்ற வரிகளைக் கவனிக்கையில் நடனத்தில் தனக்கு மிஞ்சியவர் எவருமில்லையென்று திக்கு விஜயம் செய்துவந்த காளியின் கர்வத்தை அடக்க நடேசர் இடது கால் தூக்கி ஆடி அவளைவென்றார் என்ற கருத்து வெளிப்படுகிறது. சத்தியின் அம்சமாகிய சந்திர கலையில் சுவாசியாமல் சூரிய கலையில் என்றும் பதினாறாய் நிற்கும் உத்தம நிலையைப் போதிப்பதாகத் தோன்றுகிறது.

நாட்டிய நாதம் நல்வழி செலுத்தியே
நீட்டிடக் குறுக்கிட நினைத்தவாறு செய்திட
அட்சரத் தாலே அளந்திடும் உபாயம்
காட்டியே நாதம் லயித்த பதவி
தந்தோம் என்றாடித் தாளம் உரைத்தானே.

என்ற வரிகளாலும் தெரிகிறது.