அனுபவத்தையே தருதல் வேண்டும்.ஒரு மனத்திலிருந்து மற்றொரு மனத்திற்கு அந்த அனுபவம் மாறி அமைய வேண்டும்" என்கிறார் அறிஞர் ஆபர்கிராம்பி1. உண்பவர்க்குச் சுவைகளை நாடும் வேட்கையும் சுவை உணரும் திறனும் மட்டும் இருந்தால் போதும். ஆயின் சமைப் பவர்க்கு அவற்றோடு இன்னும் இருவகைத் திறமை வேண்டும்; சுவை அமைத்துச் சமைக்கும் திறனும் வேண்டும்; சுவையான உணவைப் பிறர் உண்ணுமாறு செய்யும் திறனும் வேண்டும். அதுபோல் கலையை நுகர்வோர்க்கு அதில் வேட்கையும் உணரும் திறனும் மட்டும் இருந்தால் போதும்; கலைஞர்க்கோ, கலையைப் படைத்தளிக்கும் திறனும் வேண்டும்; பிறர் அந்தக் கலையை நுகருமாறு செய்யும் திறனும் வேண்டும். ஆகவே, நாம் உணர்ந்தது மட்டும் அல்லாமல், பிறர்க்கு உணர்த்தலும் வேண்டும்; தாம் விரும்பிப் போற்றியது மட்டும் அல்லாமல், பிறர் விரும்பிப் போற்றுமாறு செய்தலும் வேண்டும். புலவர் உணர்ந்த அனுபவமே புலவரின் பாட்டில் உணர்த்தப்படுவது. உணர்த்தும் திறன் அந்த அனுபவத்திற்கு ஒரு கருவியாகபபயன்படுகிறது. உணர்த்தும் திறனில் குறை இருந்தாலும கலை குறையுடைதாகிறது; உணர்த்தப்படும் அனுபவத்தில் குறை இருந்தாலும், கலை குறையுடையதாகிறது. 1. Literature communicates experience;that is to say the experience which lived in the author's mind must live again in the reader's mind. It is not enough to give the reader what has been experienced, neither is it enough to give him how the experience has been taken. The experience itself must be given, transplanted from one mind to another.
-Ibid. p.34 The true poet, whatever his range and quality, is one in whom the power of seeing and feeling the sensuous beauty and spiritual meaning of things exists in a preeminent degree, and to whom moreover, another special power has been granted-the power of so expressing and interpreting what he sees and feels as to quicken our own imaginations and sympathies, and to make us see and feel with him - W.H. Hudson, An Intro- duction to Study of Literature, pp 90-91. |