என்பன முதலாக, உணர்ச்சியின் அழுத்தத்திற்கு ஏற்றவாறு பல்வேறு வகையில் மாறி நிற்கக் காணலாம். உணர்ச்சி தனக்கு ஏற்றவாறு பயன்படுத்திக்கொண்டு வெளிப்படுகிறது. ஆகையால் இத்தகைய திரிபு ஏற்படுகிறது. சொற்பொருள் வகையிலும் உணர்ச்சி இவ்வாறே செய்கிறது எனலாம். உணர்ச்சிக்கு என்று சொற்கள் வேறு வேறு பொருள் பயந்து நிற்பதில்லை. அறிவு நிலையில் உள்ள சொற்பொருளே உணர்ச்சி நிலைக்கும் உதவுவதால் உணர்ச்சி அங்கும் தக்க திரிபுகள் ஏற்படுத்திக்கொள்கிறது. இவள் கூந்தல் நறுமணம் மிகுந்தது என்பது அறிவு நிலையில் நின்று அமைதியாகப் புலப்படும் கருத்து. உணர்ச்சி நிலையில், இதே. இவள் கூந்தலைப் போல் நறுமணம் உள்ளது வேறு இல்லை எனச் சிறிது மாறும். உணர்ச்சி மிகுமாயின். இவள் கூந்தலைப்போல் நறுமணம் உள்ளது. வேறு உண்டோ? என வினாவாக மாறும். பாட்டுவடிவமாக நிலைபெறத்தக்க உணர்ச்சியாயின், மனிதன் தனக்குள் வியந்து பாராட்டிக் கொள்வதாக இல்லாமல், ஒரு வண்டைப் பார்த்துக் கூறுவதாக, கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி -அரிவை கூந்தலின் நறியவும் உளவோ நீ அறியும் பூவே1
என்று அத்திரிபே கற்பனை கலந்து அமையும். ஐந்துமணி ஆகியும் என் பையன் வரவில்லையே என்பது வீட்டு வாயிலில் நின்று எண்ணும் தந்தையின் உணர்ச்சி குறைந்து மொழியாகும். மணிஐந்து ஆய்விட்டதே, இன்னும் பையனைக் காணோமே 1. குறுந்தொகை, 2 |