Untitled Document அனைத்தையும் ஆங்கே அழகுறச் செய்து இலௌகிக வாழ்க்கையில் பொருளினை இணைக்கும் பேதை மாசத்தியின் பெண்ணே வாழ்க !* | என்றபாரதியார் பாட்டு இதனை விளக்குவதாகும் புதுமைப் படைப்பு இவ்வாறு காணும்போது எந்தப் பொருளையும் பாட்டில் அமைத்துப் பாடலாம்என்பது தெளிவாகிறது.ஒரே பொருளை நிழற்படக்கருவி கொண்டு சில வகையாகப் படம் எடுத்தல் கூடும். ஒரே பொருளைப் பல புலவர் பாடலாம் ; பல பாட்டுகளில் அமைக்கலாம். நிலவை நாட்டுக்கு நாடு வெவ்வேறு வகையாகப் புலவர் பாடியுள்ளனர் ; ஒரே நாட்டில் ஒரே மொழியில் பல்வேறு புலவர் பல்வேறு வகையாகப் பாடியுள்ளனர்.நிழற் படக்கருவியால் எடுக்கப்பட்ட படங்களாயின், அப்படங்கள் ஏறக்குறைய ஒரே வகையாகத் தோன்றும். ஆயின், புலவர் படைத்துத் தரும் பாட்டின் காட்சிகள் புதுப்புதுக் கவர்ச்சி உடையனவாக விளங்கும். காரணம் என்ன ? நிழற்படக் கருவியால் எடுக்கப்பட்ட படங்களில் பொருள்கள் உள்ளவாறே காணப்படுகின்றன. படம் எடுத்தவரின் உள்ளத்து உணர்ச்சிகள் அவற்றில் இடம் பெற முடியவில்லை. பாட்டிலோ, பொருள்களின் தன்மையைவிட, பாடியவரின் உணர்ச்சிகளே சிறப்பிடம் பெறுகின்றன. புலவர், பொருள்களை விளக்குவதைவிடத் தம் உள்ளத்து உணர்ச்சியையே நமக்குத் தந்துள்ளார். புலவர் பலரும் ஒரே வகையான உள்ளம் படைத்தவர் அல்லர் மாந்தரின் முகங்களில் காணப்படும் வேறுபாடுகளைவிட, உள்ளங்களின் வேறுபாடு மிகுதி. ஆகவே, நுண்ணுணர்ச்சியும் நுண்புலனும் வாய்ந்த புலவர்களின் உள்ளங்கள் பலவாறு வேறுபடுவன எனலாம். ஒரே புலவர் அவ்வப்போதைய மன நிலைக்கு ஏற்ப, அவ்வக் காலத்துச் சூழ்நி்லைக்கு ஏற்பப் பல வேறுபட்ட உணர்ச்சிகளை உடையவர் ஆவர். இத்தகைய வேறுபட்ட உணர்ச்சிகளைக் கொண்டு பொருள்களின் அழகைக் கற்பனை செய்து பாடுவதால்தான், ஒரே பொருளைப் பலர் பாடினும், அப் பாட்டில் புதுப்புதுக் காட்சிகளைக் காணமுடிகிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பாரியின் வாழ்வை இன்று ஒரு புலவர் பாடின்,அப்பாட்டில் புத்துணர்வு பெற முடிகிறது. பழைய பாஞ்சாலியின் சபதத்தையே இன்று _________________________________________________ (* பாரதியார் பாடல்கள், கவிதைத் தலைவி) . | |
|
|