சிறுவர்களும், மேகங்களை நீராவித்திரள் என கருதுகின்றனர். கடல் நீர் கதிரவன் வெப்பதால் ஆவியாக மாறி வானத்தில் எழுந்து திரண்டு மேகமாக உருக்கொள்கின்றது என்று பள்ளிக் கூடத்துச் சிறுவர்களும் கற்றுக்கொள்கின்றனர். அதனால் முன்னோர்களின் கற்பனையின்பம் இக் காலத்தில் குறைந்து போயுள்ளது. இவ்வாறே எத்தனையோ கற்பனையின்பங்களை இழந்து விட்டுத்தான், விஞ்ஞான அறிவை வளர்த்திருக்கிறோம். நாம் இழந்தவை கற்பனைகளில் மட்டும் அல்லாமல், முன்னோர்களின் உணர்வுகளிலும் பல உண்டு. ஒன்று பார்ப்போம். பிரிவு துன்பம் தருவது என்பது பொதுவான உண்மை, முன்னோர்களின் காலத்தில் நண்பர்களோ காதலர்களோ பிரிந்த காலத்தில் மிக வருந்தினார்கள்; கண்ணீர் வடித்துக் கலங்கினார்கள். நம் காலத்திலும் வருந்துகிறோம், கலங்குகிறோம். ஆனால் முன்னோர்கள், பிரிவின்போது, உணர்ந்த அவ்வளவு ஆழ்ந்த துன்ப உணர்வு நமக்கு இல்லை. முற்காலத்தில் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்தபோது, மறுபடியும் இவரைக் காண்பது எப்போது என்ற ஏக்கம் மிகுந்து நிற்கும். இப்போது ஒருவரை ஒருவர் பிரியும்போது, இவர் நம்முடன் இல்லாமல் பிரிந்து செல்கிறாரே என்ற சிறு கவலை மட்டுமே ஏற்படுகிறது. காரணம் என்ன? அக்காலத்தில் பெருந்தொல்லையாக இருந்த பயணமுறை, தொலைவில்உள்ளவர்களோடு அடிக்கடி தொடர்பு கொள்ள முடியாதவாறு போக்குவரவு அற்ற நிலைமை, வெளிநாடுகளிலிருந்து செய்திகள் அடிக்கடி வந்து எட்ட முடியாத நிலைமை முதலியன ஆகும்.
இத்தகைய இடர்பாடுகள இருந்த காரணத்தால்தான் பழங்காலத்தில் ஆற்றுக்கு அப்பால் உள்ள ஊரில் பெண் |