பக்கம் எண் :

9. கண்களின் இன்னல்49

தனியே நின்று பார்க்க ஓரளவு முடிகிறது. ஆகையால் அப்போது
தன் வாழ்க்கையே தொலைவில் நின்று அயலார்
பார்ப்பதுபோல் -- நாடகக் காட்சிகளைப் பார்ப்பவர்
போல்--அமைதியாகப் பார்த்து எண்ண முடிகிறது,

திருவள்ளுவர் எழுதிய காமத்துப்பாலில் உள்ள காதலனும்
காதலியும் இளைஞர்களே, ஆனால் உணர்ச்சியே வாழ்வாக
நிற்பவர்கள் அல்லர். இடையிடையே சிறிது நேரம் அறிவின் தெளிவும்
அவர்களுக்கு வாய்க்கின்றது. எழுதும் ஆசிரியராகிய திருவள்ளுவரின்
அறிவுத் தெளிவு, அவர் படைத்த பாத்திரங்களாகிய காதலிக்கும்
காதலனுக்கும் வாய்த்திருக்கிறது.

காதலன் சிலநாள் பிரிந்திருந்த காரணத்தால் அவனைக் கண்டு பழக
முடியாமல் வருந்தினாள் அந்த நங்கை. படிப்படியாக அவளுடைய
துயரம் பெருகியது. கண்ணீர் கலங்கினாள்,

அவளுடைய துயரத்தைத் தணிக்க முயன்றாள் தோழி. "ஏன்
அம்மா, இப்படி அழுகிறாயே. அவர் சொன்ன சொல் தவறாதவர்.
நம்பிக்கையானவர் என்று நீ தானே சொன்னாய். இப்போது சிலநாள்
பொறுத்திருக்க முடியாமல் வருந்திக் கண் கலங்குகிறாயே, அவர்
விரைவில் வந்துவிடுவார் அம்மா! இப்படி நீ இங்கே தனித்துக்கிடந்து
அழுவது அவருக்குத் தெரியப்போகிறதா? இந்த அழுகையையும் உன்
துயரத்தையும் உணர்ந்து உடனே வந்து சேரப்போகிறாரா? இதனால்
உனக்கு நீயே இடையூறு தேடிக் கொள்கிறாய். உன் உடலையும்
கெடுத்துக் கொள்கிறாய். ஒருகால் துயரப்பட நேர்ந்தாலும், அது
உள்ளத்தளவில் இருக்க வேண்டுமே தவிர, இப்படிக் கண் கலங்கி
அழுவதால் பயன் என்ன" என்றாள்.

தோழியின் இந்தப் பேச்சைக் கேட்ட நங்கை சிறிது நேரம்
அமைதியாக இருந்தாள். அவள் உற்ற துயரம் மாறிச்