எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ காதலர் செய்யும் சிறப்பு. (குறள், 1208) ஒருநாள் சோர்வும் வெறுப்பும் மிகுந்துவிட்டன, "நான் வேறு நீ வேறு என்பது இல்லை; நாம் இருவரும் ஓர் உயிர் ஆகிவிட்டோம்" என்று முன்பு காதலன் சொல்லிய சொல்லையே நினைத்துக்கொண்டாள், அவ்வாறு வேறு அல்லேம் என்று சொன்னவர் இன்று அன்பு இல்லாதவர் ஆகிவிட்டார். அதை நினைத்தாலும் என் உயிர் மாய்வதுபோல் உள்ளதே. ஆனாலும் நான் இன்னும் ஏன் உயிரோடு இருக்கிறேன் அவரோடு யான் அன்பால் பொருந்தியிருந்த நாட்களை இடையிடையே நினைப்பதால், அந்த நினைப்பால் தான் இன்னும் உயிரோடு இருக்கிறேன் என்கிறாள். விளியும்என் இன்னுயிர் வேறல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து. (குறள், 1209) மற்றுயான் என்உளேன் மன்னோ அவரொடுயான் உற்றநாள் உள்ள உளேன். (குறள், 1020) காதலன் வருவதாகக் கூறிச் சென்ற காலம் நெருங்கி விட்டது, இன்னும் அவன் வரவில்லை. ஒவ்வொரு நாளாகக் காதலி கணக்கிட்டுவந்தாள். பிரிவாற்றாமைத் துன்பம் வளர்ந்துவந்தது. அதனால்ஒரு நாள் கழிவது ஒரு மலையாக இருந்தது;ஒரு நாள் கழிவது ஏழு நாள் கழிவதுபோல் இருந்தது, நீண்ட காலமாகத் தோன்றியது. உயிர் வாழ்வதே பெருஞ்சுமையாக-பெருந்துன்பமாகத் தோன்றியது. ஆனால் ஒரு நம்பிக்கைதான் அவளுடைய உயிர் போகாமல் |