பக்கம் எண் :

133

தற்றுடுத்தல்

     ஆடவர் அரையில் ஆடை யணியும் முறை,

     (1) சுற்றிக் கட்டுதல்,

     (2) தாறு பாய்ச்சிக் கட்டுதல்,
     என இருவகை. இவ் விரண்டும் தமிழருடையனவே. சிலர் தாறு பாய்ச்சிக் கட்டுதல் ஆரிய வழக்கம் எனக் கருதுகின்றனர். அது தவறு.
தாறு பாய்ச்சிக் கட்டுதலுக்கு முந் நிலைப்பாடு வேண்டும். அவை,
     (1) மெல்லாடை,
     (2) பல்வேறு மெய் யியக்கம்,
     (3) வினைவிரைவு,
     என்பன. பஞ்சினாலும் பட்டினாலும் நெய்யப்பட்ட மெல்லாடை, வரலாற்றுக் காலத்திற்கு முன்பே தமிழர் அணிந்துவந்தனர். உழவு, கூத்து, போர் முதலிய தொழில்கள் பல்வகை உடம்பசைவையும் விரைந்த செலவையும் கடுவுழைப்பையும் வேண்டுவன. ஆதலால், அவற்றைச் செவ்வையாய்ச் செய்தற்குத் தாறுபாய்ச்சிக் கட்டுதல் இன்றியமையாதது. இருந்தவிடத்தி லிருந்துகொண்டு நெசவாளி தன் வேட்டியைச் சுற்றிக் கட்டிக்கொண் டிருக்கலாம். ஆயின், விரைந் தியங்கும் வேட்டைக்காரனும், போர் செய்யும் மறவனும், நடஞ் செய்யுங் கூத்தனும், தாறுபாய்ச்சிக் கட்டாமல் தம் தொழிலைச் செய்யமுடியாது. கால் சட்டையும் சல்லடமும் (Drawers, அரைக் காற் சட்டை) பண்டைக் காலத்திலில்லை.
     தாறுபாய்ச்சிக் கட்டுதல்,
     (1) மொட்டைத்தாறு,
     (2) வட்டத்தாறு,
     (3) வால் தாறு,
     என மூவகை. மொட்டைத் தாறாவது, சுற்றிலும் வேட்டியைத் திரைத்து, முழங்காற்குக் கீழ் மிகுதியாய் அல்லது ஒரு சிறிதும் வேட்டி தொங்காதபடி முன்புற முந்தியை அல்லது அடிப்பாகத்தை இருகாற்குமிடையே பாய்ச்சிப் பின்னால் இறுகச் செருகுதல். வட்டத்தாறாவது; ஒருபுற முந்தியைக்