பக்கம் எண் :

142

மாராயம்

     மாராயம் என்பது, செயற்கரிய செய்த அமைச்சரும் படைத்தலை வரும் மறவரும் புலவரும் பிறரும் மாராயனாகிய வேந்தனாற் பெறுஞ் சிறப்பு. அது 'மாராயம் பெற்ற நெடுமொழி யாகும்" என்று வஞ்சித் திணைத்துறையாகத் தொல்காப்பியப் புறத்திணையியலில் (81) குறிக்கப் பட்டுள்ளது.

     இதற்கு நச்சினார்க்கினியர் பின்வருமாறு உரை கூறியுள்ளார்.

     "மாராயம் பெற்ற நெடுமொழியாலும்- வேந்தனாற் சிறப்பெய்திய வதனால் தானேயாயினும் பிறரேயாயினும் கூறும் மீக்கூற்றுச் சொல்லும்;

"சிறப்பாவன:- ஏனாதி காவிதி முதலிய பட்டங்களும் நாடும் ஊரும் முதலியனவும் பெறுதலுமாம். முற்கூறியது படைவேண்டியவாறு செய்க என்றது; இஃது அப் படைக்கு ஒருவனைத் தலைவனாக்கி அவன் கூறியவே செய்க அப் படை என்று வரையறை செய்தது.
"போர்க்கட லாற்றும் புரவித்தேர்ப் பல்படைக்குக்
கார்க்கடல் பெற்ற கரையன்றோ-போர்க்கெலாந்
தானாதி யாகிய தார்வேந்தன் மோதிரஞ்சேர்
ஏனாதிப் பட்டத் திவன்"
     இது பிறர் கூறிய நெடுமொழி.
"துடியெறியும் புலைய
எறிகோல் கொள்ளும் இழிசின்
கால மாரியின் அம்பு தைப்பினும்
வயற் கெண்டையின் வேல் பிறழினும்
பொலம்புனை யோடை அண்ணல் யானை
இலங்குவான் மருப்பின் நுதிமடுத் தூன்றினும்
ஓடல் செல்லாப் பீடுடை யாளர்
நெடுநீர்ப் பொய்கை பிறழிய வாளை
நெல்லுடை நெடுநகர்க் கூட்டுமுதற் புரளும்
தண்ணடை பெறுதல் யாவது படினே
மாசில் மகளிர் மன்றல் நன்றும்
உயர்நிலை யுலகத்து நுகர்ப அதனால்