கன்னி 2ஆம் பக்கல் (18-9-74) அறிவன் (புதன்)கிழமை பிற்பகல் 5 மணிக்கு, சென்னை மாநகர் நுங்கம்பாக்கம் ஏரிப் பகுதியில், மாண்புமிகு கல்வியமைச்சர் பர். (Dr.) நாவலர் இரா. நெடுஞ்செழியனார் அவர்கள் தலைமையில், மாண்புமிகு முதலமைச்சர் பர் (Dr.) கலைஞர் மு. கருணாநிதியார் அவர்கள் தொடங்கிவைத்த வள்ளுவர் கோட்டக் கால்கோள் விழாவில், மாண்புமிகு பொதுப்பணித்துறை யமைச்சர் ப. உ. சண்முகனார் அவர்கள் வேண்டுகோட் கிணங்கி, மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை யமைச்சர் பேரா. க. அன்பழகனார் அவர்கள் முன்னிலையில், நான் வழங்கிய வாழ்த்துரை நேரமின்மைபற்றி முற்றுப் பெறாமையால், அதைப் பலர்க்கும் பயன்படுமாறு முற்றுவித்தற் பொருட்டு, இந் நெடு விளக்கக் கட்டுரையை வரையலானேன். |