பக்கம் எண் :

18தமிழியற் கட்டுரைகள்

2. புதுச் சொற்புனைவு    
     பல பொருள்கள் பல் வகையில் வேறுபட்டிருப்பினும், அவற்றிற் கெல்லாம் பொதுவாக ஒரு தன்மை காணக்கிடக்கின்றது. உயிரிகள் ஒன்று இன்னொன்றை அல்லது பலவற்றைப் பிறப்பிப்பது போன்றே கருத்துகளும் ஒன்று இன்னொன்றை அல்லது பலவற்றைத் தோற்றுவிக்கின்றன. இவ் வீருண்மைகளையும் கண்ட குமரிக் கண்டத் தமிழர். ஓரடியினின்றே ஈற்று வேறுபாட்டாற் பல்வேறு சொற்களைத் திரித்து, அவற்றாற் பற்பல பொருள்களையுங் குறிப்பித்திருக்கின்றனர்.
     எ - கா :        
  வெள்        
  வெள்ளென வெள்கு வெளி வெளு வெளேல்
  வெள்ளை வெட்கு வெளிப்பு வெளுப்பு வெளேர்
  வெள்ளம்   வெளிவு வெளுவை  
  வெள்ளி   வெளிச்சம்    
  வெள்ளில்   வெளிச்சி    
  வெள்ளந்தி   வெளிச்சை    
  வெள்ளென்காட்டி   வெளில்    
  (வெள்ளெனக்காட்டி)   வெளிறு    
           
  வெள் -விள் - விள (வெள்ளைத் தோட்டுக் கனி)
      விளம், விளா, விளவு, விளாத்தி
      விளர்
      விளர்ப்பு (வெளுப்பு)
    விள் - வில் - வில்வு, வில்வம், வில்லம் (கூவிளம்)
    விள் - விள - விளங்கு, விளக்கு, விளக்கம்.
  வெள் - வெண் - வெண்பு (வெண்ணிலம், plain)
  வெள் - வெறு. வெற்று வெறு-வெறி - வெறிப்பு (முகில் நீங்கி வானம் வெறியாதல்)
  (வெள்ளிலை-வெற்றிலை) வெறிச்சு
  (வெண்மை = வெறுமை)
  வெறு - வறு வறு - வறிது
வறுமை
  வெள் - வெட்டு (மின்) வெட்டு - வெட்டி (கூலியில்லா வெறுமை வேலை)