Radio என்னும் ஆங்கிலச் சொல், Radius என்னும் இலத்தீன் சொல்லினின்று திரிந்தது. இலத்தீன் பொருள், தண்டு, ஆரை, கதிர் என்பன. கதிர் என்னும் சொல்லினின்று கதிரம் அல்லது கதிரியம் என்றொரு சொல்லை நாம் திரித்துக்கொள்ளலாம். |
சில பொருள்களின் அல்லது கலை முறைகளின் பெயர், அவற்றைக் கண்டுபிடித்த ஆட்பெயரால் அல்லது இடப்பெயரால் அமைந்துள்ளன. அவற்றை அப்படியே வரிபெயர்த்து வைத்துக்கொள்ளலாம். |
எ-கா : |
| galvanism என்னும் மின்னாக்க முறை கால்வனி (Galvani) என்பவராற் கண்டுபிடிக்கப்பட்டது. |
galvanization = கால்வனித்தல். galvanism கால்வனியம். bauxite என்னும் மண் வகை பிரான்சு நாட்டில் பாக்கசு (Baux) என்னும் இடத்திற் கண்டுபிடிக்கப்பட்டது. அதைப் பாக்கசி என்று வரிபெயர்த்துக் கொள்ளலாம். |
chemistry என்னும் ஆங்கிலச் சொல், alckemy என்பதனின்று திரிந்தது. இது al - kimia என்னும் அரபிச் சொல்லின் திரிபு. al = the (அந்த என்று பொருள்படும் முன்னொட்டு); kimia என்பது khemia என்பதன் திரிபு. இது எகிப்து (Egypt) நாட்டுப் பெயரின் கிரேக்க வடிவம். ஆகவே, chemistry என்பதைக் கெமியம் என்று சொல்லலாம். |
chemist = கெமியன், கெமியர் |
chemical = கெமிய. |
சில பொருட் பெயர்கள் அளவுபற்றி அமைந்துள்ளன. duoderum என்பது பன்னிரண்டு என்னும் இலத்தீன் எண்ணுப் பெயர். அது ஆங்கிலத்தில் பன்னிரு விரல் (அங்குலம்) அளவுள்ள சிறு குடற் பகுதியைக் குறிக்கின்றது. இதைப் பன்னீரம் என்று மொழிபெயர்க்கலாம். |
Furlong என்னும் ஆங்கிலச் சொல் படைச்சால் நீளம் என்னும் பொருளது. fur = furrow (படைச்சால்). படைச்சால் என்பது அணைப்பு என்றும் சொல்லப்படும். ஆகவே, furlong என்பதைப் படைச்சால் என்றோ, அணைப்பு என்றோ, சானீளம் என்றோ மொழிபெயர்க்கலாம். |
சில பெயர்கள் உவமையாகு பெயராயுள்ளன. bacterium என்னும் ஆங்கிலச் சொல் சிறு குச்சுப்போல் தோன்றும் ஒரு வகை நுண் புழுவின் பெயர். இது குச்சு என்று பொருள்படும் baktron என்னும் கிரேக்கச் சொல்லின் குறுமைப் பொருள் வடிவான bakterion என்பதன் திரிபு. இல் என்பது தமிழில் ஒரு குறுமைப் பொருட் பின்னொட்டு (diminutive suffix). |