பக்கம் எண் :

நிகழ்கால வினை எச்சம் எது?37

     தொன்றுதொட்டு நிகழ்கால வினையெச்சமென வழங்கி வரும் 'செய்ய' என்னும் வாய்பாட்டுச் சொல், காரண காரியமும் உடனிகழ்ச்சியும் காரிய காரணமும்பற்றி வரும் தொடர்களில் முறையே முக்காலமும் உணர்த்துதலின். நிகழ்காலத்திற்குச் சிறப்பா யுரியதெனக்கொள்ளுதல் பொருந்தாது.

     எ-கா :

     மழை பெய்யப் பயிர் விளைந்தது - காரண காரியம் (இறந்தகாலம்)

     மின்னல் மின்ன இடி இடிக்கிறது - உடனிகழ்ச்சி (நிகழ்காலம்)

     பயிர் விளைய மழை பெய்யும் - காரிய காரணம் (எதிர்காலம்)
     இனி, உடனிகழ்ச்சிபற்றி, 'செய்ய' என்னும் வினையெச்ச வாய் பாட்டை நிகழ்காலமெனக் கொள்ளுதுமெனின், அதுவும் முக்காலத்திற்கும் பொதுவாய் வருதலின், அங்ஙனம் கோடற்குரியதன்றாம்.
     எ-கா :
     சாத்தன் சொல்ல இளங்கோவடிகள் கேட்டனர் - இ. கா.
     கண்ணொன்று காணக் கருத்தொன்று நாடுகின்றது - நி. கா.
     முருகன் முழவியக்கக் கொற்றன் குழலூதுவான் - எ. கா.
     இங்ஙனம் 'செய்ய' என்னும் வாய்பாட்டு வினையெச்சம் ஒரு வகையிலும் நிகழ்காலத்தைச் சிறப்பாய் உணர்த்தாமையின், அதனின் வேறான ஒரு சொல்லே உண்மை நிகழ்கால வினையெச்சமாயிருத்தல் வேண்டும். 'செய்ய' என்னும் நிகழ்கால வினையெச்சத்திற்கு நேரான 'to do (infinitive mood)' என்னும் ஆங்கில வினைவடிவமும் எதிர்காலத்தையே உணர்த்துவதும், செய்ய என்னும் வடிவுச்சொல் இயல்பாக 'இனிமேற் செய்ய' என்றே பொருள்படுவதும் இங்குக் கவனிக்கத் தக்கன.
     ஆங்கிலத்தில் நிகழ்கால வினையெச்சம் (present participle) என்று சொல்லப்படுவது 'doing' என்னும் வாய்பாட்டு வினைச்சொல்லாகும். அதற்கு நேரான தமிழ் வாய்பாடு 'செய்துகொண்டு' என்பதே. 'தச்சன் பெட்டி செய்துகொண்டு இருக்கின்றான்', என்னும் சொற்றொடரில், 'செய்துகொண்டு' என்னும் சொல் இருசொற்போல் தோன்றினும் ஒரு சொற்றன்மைப்பட்டும், எச்சப் பொருள் கொண்டும் நிகழ்காலத்தைச் சிறப்பாய் உணர்த்தியும், நிற்றல் காண்க. 'செய்து கொண்டு' என்னும் வாய்பாட்டு வினையெச்சம், இருந்தான் இருக்கின்றான் இருப்பான் என்னும் முக்கால முற்றொடும் பொருந்துதலின், நிகழ்காலத்திற்குச் சிறப்பாய் உரித்தாதல் எங்ஙனமெனின், 'செய்து' என்னும் இறந்தகால வினையெச்சம் செய்து வந்தான், செய்து வருகின்றான், செய்து வருவான் என முக்கால முற்றொடும் பொருந்துமாயினும் இறந்த காலத்திற்கே சிறப்பாயுரியதென்று கொள்ளப்பட்டாற்போன்றே 'செய்து கொண்டு' என்னும் நிகழ்கால வினையெச்சமும் முக்கால முற்றொடும்