பக்கம் எண் :

11

செட்டியார் அவர்களும் புலமை மிகுந்த சான்றோரும் திருமுறைச்
செல்வரும் ஆகிய வித்துவான் திரு. க. வெள்ளைவாரணன் அவர்களும்,
பேரிலக்கியங்களைத் தம் புதுவகை முயற்சியால் பொது மக்களுக்கு
அறிமுகப்படுத்திப் புலவர் உலகில் புகழ்பெற்று விளங்கும் கலைமகள்
ஆசிரியர் திரு. கி. வா. ஜகந்நாதன். அவர்களும், புதிய இலக்கிய
படைப்பில் ஊக்கம் கொண்டுள்ள திரு. டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்
அவர்களும் இந் நூலுக்கு அணிந்துரைகள் வழங்கிச் சிறப்பித்துள்ளனர்.
அவர்கள் அனைவர்க்கும் நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன்.

மு. வை. அரவிந்தன்