“திருவாய்மொழி, திருப்பாட்டு, திருவாசகம் என்கின்ற கொச்சக ஒரு போகுகளில் காண்க (செய் - 149) திருவெம்பாவை எட்டடியான் வந்து, இவ்வாறு இற்றன (செய் - 149). திருவுலாப் (ஆதி உலா) புறத்துள்ளும் வாமான ஈசன் வரும் என முடித்து” (செய் - 160). பிற்காலத்தில் தோன்றிய சிற்றிலக்கியங்களாகிய பிள்ளைத் தமிழ், உலாச்செய்யுள், கலம்பகம் ஆகியவற்றை நன்கு அறிந்துள்ளார் (புறத் - 29, செய் - 239). வடமொழிப் புலமையும் சமயநூல் அறிவும் நச்சினார்க்கினியர் வடமொழியில் உள்ள கீதையைத் தம் உரையில், “கண்ணன் எப்பொருளும் தானாய் இருக்கின்ற படியைக் காட்டி ஸ்ரீகீதை அருளிச் செய்து எல்லாரையும் போதித்தாற் போல’ (மதுரைக் - 763) என்று குறிப்பிடுகின்றார். வேள்வி செய்வதற்குரிய முறை, பொருள், சடங்கு ஆகியவற்றைச் சீவக சிந்தாமணியில் இலக்கணையார் இலம்பகத்தில் (2462, - 68) தெளிவாக விளக்குகின்றார். பத்துப்பாட்டில் (முருகு-180) முத்தீ என்பதனை ‘ஆகவனீயம் தக்கிணாக்கினி, காருகபத்தியம்’ என்று கூறுகின்றார். நான்மறை, ஆறங்கம் எவை எவை என்பதைப் பல இடங்களில் தெளிவுபடுத்துகின்றார், (தொல்-பாயிரம்; கலி-1. புறத்-20.) அந்தணர் முதலிய சொற்களுக்கு, பொருள் பின் வருமாறு உரைக்கின்றார்: “அந்தத்தை அணவுவார் அந்தணர்; என்றது வேதாந்தத்தையே நோக்குவார் (முருகு-96, கலித்-1). “வேதாந்தத்தை எக்காலமும் பார்ப்பார் (மதுரை-474). இருபிறப்பாளர்-உபநயனத்துக்கு முன்பு ஒரு பிறப்பும், பின்பு ஒரு பிறப்புமாகிய இருபிறப்பினையும் உடைய அந்தணர் (முருகு-182). கந்தழி-ஒரு பற்றுக்கோடின்றி அருவாகித் தானே நிற்கும் தத்துவம் கடந்த பொருள். நச்சினார்க்கினியர் தம் சமயப்புலமையும் கொள்கையும் வெளிப்படும் வகையில் உரை எழுதும் இடங்களில் சில: உலகம் உவப்ப - சீவான்மாக்கள் உவப்ப (முருகு-1) |