பக்கம் எண் :

132விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

ஒரு   வழியாயிருப்பதால்  இப்படிக்  கர்வம்  கொள்வது  தவறாகாது  என்று
எண்ணுகிறேன்."

மொழி பெயர்ப்பு

      ராஜாஜி  தாம்  அனுபவித்த முதல் சிறைவாசத்தின்போது, சாக்கிரட்டீஸ்
என்ற கிரேக்க ஞானியின் சொற்பொழிவை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி
பெயர்த்தார்.  அதைப்பற்றிச்  சிறையில்  எழுதிய நாட்குறிப்பில் கீழ் வருமாறு
குறிப்பிட்டுள்ளார்.

      " நேற்று  இரவு  திருக்குறளும்,  கிறிஸ்தவ  வேத நூலாகிய பைபிளும்
வாசித்தேன்.

      " இன்று  சாக்கிரட்டீஸ்  பிரசங்கத்தில் ஒரு பாகத்தைத் தமிழில் மொழி
பெயர்த்தேன். பிற்பகலில் ராமாயணம் படித்தேன்."1

     " இன்று  நூல் நூற்கவில்லை. சாக்கிரட்டீஸ் மொழி பெயர்ப்பு அதிகமாக
நடந்தது. ' க்ரேட்டோ ' என்ற  பகுதி  முழுவதையும்  மொழி  பெயர்த்தேன்.
" பீடோ "  என்னும்  பகுதி  அதிகக்  கஷ்டமாயிருக்கும்  போல் தெரிகிறது.
ஆனால்,   அதில்   கூறியுள்ள   தத்துவ   சாஸ்திரம்  நம்முடைய  இந்திய
மக்களுக்குச்  சர்வ  சாதாரணமாகத்  தெரிந்த  ஒன்றாதலால் பெரும்பகுதியை
மொழிபெயர்க்காமல்  விட்டு  விடலாம்  என்று  எண்ணுகிறேன்.  நம்முடைய
மக்களை   அந்தக்   கிரேக்கப்  பேராசிரியரின்  மேன்மையை  உணரும்படி
செய்வதே என்னுடைய நோக்கம்.

     " இறுதியில்   இயேசு   கிறிஸ்துவின்   சரிதையும்  சுருக்கமாக  எழுத
விரும்புகிறேன்.   இந்த  வேலையைமட்டும்  செய்து  முடித்துவிட்டால்  நான்
சிறையில்   இருந்த   காலம்   வீண்   பொழுதாய்க்   கழியவில்லை  என்று
மகிழ்வேன்."2

     சிறையிலே  இராஜாஜி  இலக்கியப்  பணியில்  ஈடுபட்டிருந்த காலத்தில்
அவருக்கு   காந்தியடிகள்  எழுதிய  ஒரு  கடிதத்தில்  காணப்படும்  குறிப்பு
வருமாறு:

     " தங்களிடம்    ராட்டினமும்     ராமாயணமும்   இருப்பது   குறித்து
எனக்குப்   பொறாமை     உண்டாகிறது.      வால்மீகி     ராமாயணத்தை


1. 17-1-22ல் எழுதியது 2. 'சிறையில் தவம்'பக்.125