முறையைத் தயாரித்தனர் தேசியவாதிகள். அதனை நடைமுறைக்குக் கொண்டு
வருவதிலே, சர்வசக்தி படைத்த பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக, ஒரு போட்டி
அரசாங்கம் போன்று செயல்பட்டது காங்கிரஸ் மகாசபை. தன். விடுதலைக்குப்
போராடிய வேறு எந்த நாட்டின் வரலாற்றிலும் இதற்குச் சான்று இல்லை.
இந்திய விடுதலைக்கிளர்ச்சி சாத்வீக முறையில் நடந்ததால் விளைந்த
நன்மைகளில் இதுவும் ஒன்றாகும். காங்கிரஸ் மகாசபை அன்று மெக்காலே
கல்வித் திட்டத்திற்குக் கடுமையான எதிர்ப்பு காட்டி, தேசியக் கல்வியை
நடைமுறைக்குக் கொண்டுவர முயன்றில்லையானால், தமிழ் உள்ளிட்ட இந்திய
மொழிகள் அழிந்தே போயிருக்கும். தேசத் தலைமையைக் காந்தியடிகள் ஏற்குமுன்னர், மெக்காலே கல்வித்
திட்டத்தைச் சிறிது திருத்தி, அதன் மூலமாகவே நாட்டு மக்கள்
அனைவருக்கும் கல்விதரமுடியுமென்று கோபாலகிருஷ்ணகோகலே நம்பினார்
.ஆம்; கருப்பு நாயை வெள்ளை நாயாக்க முன்றார். அதன்படி, பள்ளிக்குச்
செல்லும் வயது வந்த குழந்தைகள் எல்லோருக்குமே கட்டாய இலவசக்
கல்வியளிக்க வசதி செய்யும் உத்தியோகப் பற்றற்ற மசோதா ஒன்றை இந்திய
சட்டசபையில் பிரேபித்தார். அதன்மீது தொடர்ந்து 5 நாட்கள்
சொற்பொழிவாற்றினார். இந்திய சட்டமன்றச் சரித்திரத்திலேயே இந்த நிகழ்ச்சி
மிகவும் முக்கியமானதாகும். ஆனால், கோகலேயின் மசோதாவை பிரிட்டிஷ்
ஆட்சி ஏற்றுக்கொள்ளவில்லை; எதிர்த்துத் தோற்கடித்தது.
ஒத்துழையாமைப் போராட்ட காலத்தில் அரசாங்கக் கல்லூரிகளைப்
பகிஷ்கரிப்பதும், தேசியக் கல்வி தரும் கல்லூரிகளைத் தோற்றுவிப்பதும்
போர் முறைகளாக இருந்தன. இது, குஜராத்தில் தான் தீவிரமாக
நடைமுறைக்கு வந்தது. இதிலே, மிகவும் பின்தங்கியிருந்த மாநிலம் தமிழ்
நாடேயாகும். காரணம், ஆங்கில மோகம் இங்கிருந்த தேசியவாதிகளையும்
பிடித்திருந்ததுதான்.
பிரிட்டிஷாரின் கல்வித் திட்டம்பற்றி காந்தியடிகள் கொண்ட கருத்து
வருமாறு:
"தங்களுடைய கல்வித் திட்டத்தை வகுக்கும்போது பிரிட்டிஷார்
நம்முடைய விசேஷ தேவைகளைப் பற்றிச் சிந்திக்கவில்லை. இது இயற்கையே.
மெக்காலே, நமது இலக்கியத்தை இகழ்ச்சி செய்தார். மூட
நம்பிக்கைகளுக்கு நாம் அளவுக்கு மீறி இடம்