வெற்றிகண்ட லெனின் பற்றியும் கட்டுரைகளும் நூல்களும் எழுதினார்.
டார்வின் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டு, மதவழிப்பட்ட நம்பிக்கைகளை
மறுத்தும் வெறுத்தும் பிரச்சாரம் செய்தார். அவ்வகையில் அவர் எழுதிய
பிரசுரங்கள் ஈரோடு குடியரசுப் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டன.
சுயமரியாதை இயக்கத்தின் தந்தையான பெரியார் ஈ.வே.ரா. நடத்திய
'குடியரசு' வார இதழிலும் தூத்துக்குடியிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த
'இளந்தமிழன்' வார இதழிலும், சென்னை 'இந்து' ஆங்கில நாளிதழிலும்
செட்டியாரின் கட்டுரைகள் வெளியிடப் பெற்றன. இன்னும், தோழர் சிங்காரவேல் அவர்கள், தமிழ் எழுத்தோவியங்கள்
பலவற்றை கையெழுத்துப் பிரதியளவிலேயே வைத்து விட்டு மறைந்தா
ரென்றும், அவை பாதுகாக்கப்படாமல் மறைத்தொழிந்தன வென்றும்
அறிகிறோம்.
பொதுவாக, விஞ்ஞான-பொருளாதார அறிவு நூல்களைத் தமிழில் எழுதி
வெளியிட்டு, புதுமையும் புரட்சியும் செய்த முதல்வர் தோழர் சிங்காரவேலரே
யாவார். மீனவர் சமூகத்தில் தோன்றி, சென்னை செயிந்தோம்
கடற்கரைப்பகுதியில் வாழ்ந்த அப்பெரியாரின் வரலாறு தனிப்பெரும் நூலாக
எழுதப்பட வேண்டிய அளவுக்கு விரிவானதாகும். அவர், தேசியப்
பாசறையிலே அகில இந்தியத் தலைவராகவும், சோசலிசப் பாசறையிலே
அகில உலகப்புரட்சி வீரராகவும் விளங்கிய தமிழராவார்.
தோழர் சிங்காரவேலர், 'தொழிலாளர்-உழவர் கெஜட்'(Labour Kisan
Gazatte) என்ற பெயரில் 1923ல் வாரமிருமுறைப் பத்திரிகையொன்றை
நடத்தினார். அதிலே சோவியத் ருஷ்யாவின் சாதனைகள் பற்றித் தொடர்ந்து
எழுதி வந்தார்.
சில இதழ்கள் வெளியான பின்னர், அரசினரின் தடையால் அப்பத்
திரிகை நிறுத்தப்பட்டது. பின்னர், நண்பர்களின் பொருளுதவியைக் கொண்டு,
மற்றொரு பத்திரிகையைத் துவக்கினார். அதனையும் தடை செய்துவிட்டது
அரசு.
ஒரு குறை
அகில இந்தியத் தொழிலாளர் இயக்கத்திலே, தமிழகத்தின் இடம்
சிறப்புக்குரியதாகும். அதுபற்றிய வரலாறு உரைநடை இலக்கிய