பக்கம் எண் :

வாழ்க்கையைத் தொடங்கிய விதம்107

Untitled Document
வாழ்க்கையில் ஆழ்ந்த சுவட்டை விட்டுச் சென்றோர் மூவர் ஆவர்.
ராய்ச்சந்திரர்    தமது ஜீவியத் தொடர்பினாலும்,      டால்ஸ்டாய்,
‘ஆண்டவன் ராஜ்யம் உன்னுள்ளேயே’ என்ற தமது    நூலினாலும்,
ரஸ்கின்,‘கடையனுக்கும் கதிமோட்சம்’ என்ற நூலினாலும்  அவ்வாறு
செய்தனர்.     இவர்களைப் பற்றி உரிய இடங்களில்    விரிவாகக்
கூறுகிறேன்.

2. வாழ்க்கையைத் தொடங்கிய விதம்

     என் மூத்த சகோதரர்    என்னைப்பற்றி எவ்வளவோ அதிக
நம்பிக்கைகளையெல்லாம்     வைத்திருந்தார். பணம், பெயர், புகழ்
ஆகியவைகளில் அவருக்கு   ஆசை அதிகம்.  அவர் விசாலமான
உள்ளம்      படைத்தவர் ;  அளவுக்கு மிஞ்சிய தாராள குணமும்
உள்ளவர். அதோடு,       அவர் கபடமற்ற சுபாவமும் உடையவர்
ஆதலின் அவருக்குப்    பல நண்பர்கள் இருந்தார்கள்.  அவர்கள்
மூலம் என்னிடம் அதிக     கட்சிக்காரர்கள் வரும்படி செய்யலாம்
என்று அவர் நம்பினார்.     அத்துடன்    என் வக்கீல் தொழில்
பிரமாதமான வருவாய்     உள்ளதாக இருக்கப் போகிறது என்றும்
எண்ணிக் கொண்டார்.    அந்த எண்ணத்தில்      வீட்டுச்செலவு
மிதமிஞ்சிப் போகவும்       அனுமதித்து விட்டார். நான் தொழில்
நடத்துவதற்குச் செய்யவேண்டிய    முன்னேற்பாடுகளில் எதையும்
அவர் பாக்கி வைக்கவில்லை.

     நான் வெளிநாட்டுப் பிரயாணம்   செய்ததைக் குறித்து, என்
சாதியாரிடையே   எழுந்த புயல்,    இன்னும்  இருந்துகொண்டே
இருந்தது. அது, சாதியை இரண்டு கட்சிகள் ஆக்கிவிட்டது. இதில்
ஒரு கட்சியினர் என்னை உடனேயே சாதியில் சேர்த்துக்கொண்டு
விட்டனர். மற்றக் கட்சியாரோ,      எனக்கு விதித்திருந்த சாதிக்
கட்டுப்பாட்டை   நீக்குவதில்லை என்று உறுதி கொண்டிருந்தனர்.
முதல் கட்சியாருக்குத் திருப்தி அளிக்க வேண்டும்  என்பதற்காக
என் சகோதரர் ராஜ்கோட்டுக்குப் போகும் முன்பு என்னை நாசிக்
அழைத்துச் சென்றார்.அங்கே புண்ணிய நதியில் என்னை நீராடச்
செய்தார். பிறகு ராஜ்கோட்டிற்குப் போனதும்,  சாதியாருக்கு ஒரு
விருந்தும் வைத்தார். இதெல்லாம் எனக்குப் பிடிக்கவே  இல்லை.
ஆனால்,   என்னிடம் என் சகோதரருக்கு     இருந்த அன்போ
எல்லையற்றது.  அதேபோல் அவரிடமும் எனக்குப் பக்தி உண்டு.
ஆகையால், அவர் சொன்னதே சட்டம் என்று மதித்து,    அவர்
விரும்பியபடியெல்லாம்       யந்திரம் போலச் செய்து வந்தேன்.
இவ்விதம் திரும்பவும்       சாதியில் சேர்த்துக் கொள்ளுவதைப்
பற்றிய தொல்லை ஒருவாறு தீர்ந்தது.

     என்னைச்   சாதியில்       சேர்த்துக்கொள்ள    மறுத்த
கட்சியினரிடம்       என்னைச்    சேர்த்துக்கொள்ள வேண்டும்
என்பதற்காக           நான் முயலவே இல்லை.  அக்கட்சியின்
தலைவர்களிடம் எனக்கு வெறுப்புத்