பக்கம் எண் :

முதல் வழக்கு111

Untitled Document
சரிக்கட்டிக்கொள்ளுவதற்கு      வருமானமே இல்லை.  ஆகையால்,
பம்பாயில் நான்கு, ஐந்து  மாதங்களுக்குமேல் காலம் தள்ள என்னால்
முடியவில்லை.

     இப்படித்தான் நான்       என் வாழ்க்கையை ஆரம்பித்தேன்.
பாரிஸ்டர் தொழில், கொஞ்ச அறிவும்   அதிக ஆடம்பரமும் உடைய
மோசமான தொழில் என்று எனக்குத்   தோன்றியது. எனக்கு இருந்த
பொறுப்பை எண்ணி, பெரிதும் கவலைக்கு உள்ளானேன்.

3. முதல் வழக்கு

     பம்பாயில் இருந்தபோது,   ஒரு புறம்    இந்தியச் சட்டத்தைப்
படிக்கலானேன் ;  மற்றொரு       புறமோ,  உணவைப் பற்றிய என்
ஆராய்ச்சிகள்.     இதில்    வீரசந்திர காந்தி என்ற ஒரு நண்பரும்
என்னுடன் சேர்ந்து கொண்டார்.       என் சகோதரரோ,  எனக்குக்
கட்சிகாரர்களைப்       பிடிப்பதற்காக    அவரளவில்    தம்மால்
ஆனதையெல்லாம் செய்துகொண்டிருந்தார்.

     இந்தியச்     சட்டங்களைப் படிப்பது சங்கடமான வேலையாக
இருந்தது.        சிவில் நடைமுறைச் சட்டத்தைப் படிக்க என்னால்
முடியவே இல்லை. ஆனாலும்    ‘சாட்சிகள் சட்ட’ விஷயம் அப்படி
இல்லை.     வீரசந்திர காந்தி சொலிஸிட்டர் பரீட்சைக்குப் படித்துக்
கொண்டிருந்தார்.       பாரிஸ்டர்களையும் வக்கீல்களையும் குறித்து
எல்லாவிதமான கதைகளையும்  அவர் எனக்குச் சொல்லுவார்.  “ஸர்
பிரோஸ்ஷாவின்    ஆற்றலுக்குக் காரணமே,  சட்டத்தில் அவருக்கு
இருக்கும் அபாரமான ஞானம்தான்.    ‘சாட்சிகள் சட்டம்’ அவருக்கு
மனப்பாடமாகத் தெரியும்.       அதன் முப்பத்திரெண்டாவது பிரிவு
சம்பந்தப்பட்ட வழக்குகள்       எல்லாவற்றையும் அவர் அறிவார்.
பத்ருதீன் தயாப்ஜியின்      அற்புதமான விவாத சக்தி, நீதிபதிகளை
ஆச்சரியத்தில்      மூழ்கும்படி செய்துவிடுகிறது” என்பார். பெரிய
வக்கீல்களைப் பற்றிய     இத்தகைய கதைகளெல்லாம் என்னுடைய
மனச்சோர்வை அதிகமாக்கிவிட்டன.

     அவர் மேலும் கூறுவார்:  “ஒரு பாரிஸ்டர் ஐந்து அல்லது ஏழு
ஆண்டுகளுக்கு வருவாய்         இல்லாமல் காத்திருக்க நேருவது
அசாதாரணம்      அன்று.  அதனால்தான்  நான்    சொலிஸிட்டர்
பரீட்சைக்குப் போகிறேன்.   மூன்று ஆண்டுகளில் உம் வாழ்க்கைப்
படகை நீரே செலுத்திக்கொள்ள உம்மால் முடிந்து விட்டால், உம்மை
நீர் அதிர்ஷ்டசாலி என்று கருதிக்கொள்ள வேண்டும்.”

     மாதத்திற்கு மாதம் செலவு அதிகரித்துக் கொண்டே போயிற்று.
உள்ளுக்குள் பாரிஸ்டர்    தொழிலுக்குத் தயாராகிக் கொண்டுவரும்
போதே, பாரிஸ்டர் என்ற        விளம்பரப் பலகையை வெளியில்
தொங்கவிடுவது என் மனதுக்குச்   சமாதானம் தராத ஒரு விஷயம்.
இதனால் என்       படிப்பில் நான் முழுக் கவனத்தையும் செலுத்த