பக்கம் எண் :

126சத்திய சோதனை

Untitled Document
வெளிவந்து விட்டதற்கு நான்   பெருமைப்பட்டுக்கொள்ளக் காரணம்
எதுவுமே இல்லை. அறைக்குள்    போக நான் மறுத்திருந்தால் அது
எனக்குப் பெருமையாக இருந்திருக்கும்.  என்னைக் காத்தருளியதற்கு
கருணைக் கடலான ஆண்டவனுக்கே நான் நன்றி செலுத்த வேண்டும்.
இச்சம்பவம் கடவுள் மீதுள்ள என் நம்பிக்கையை    அதிகமாக்கியது.
அவமானம்       என்ற     தவறான    உணர்ச்சியை ஓரளவுக்கு
விட்டொழிக்கவும் இச் சம்பவம் எனக்குப் போதித்தது.

     இத்துறைமுகத்தில்     நாங்கள்          ஒரு வாரம்  தங்க
வேண்டியிருந்ததால் பட்டணத்தில் வசிக்க ஓர் அறையை அமர்த்திக்
கொண்டேன்.     சுற்றுப்புறங்களையெல்லாம்      நன்றாகச் சுற்றிப்
பார்த்தேன்.     ஜான்ஸி பார் செடி கொடிகள் நிறைந்து,   இயற்கை
வளத்தில்,    மலையாளத்தைப் போல்          இருந்தது எனலாம்.
பிரமாண்டமான மரங்களையும், மிகப் பெரிய பழங்களையும் பார்த்துப்
பிரமித்துப் போனேன்.

     எங்கள் கப்பல் நின்ற அடுத்த துறைமுகம் மொஸாம்பிக். பிறகு
மே மாதக் கடைசியில் நேட்டால் போய்ச் சேர்ந்தோம்.

7. சில அனுபவங்கள்

     நேட்டாலின் துறைமுகம், டர்பன். அதை நேட்டால் துறைமுகம்
என்பதும் உண்டு.     என்னை வரவேற்க        அப்துல்லா சேத்
துறைமுகத்திற்கு     வந்திருந்தார். கப்பல் கரையைத்   தொட்டதும்,
நண்பர்களை வரவேற்கப் பலர் கப்பலுக்கு வருவதைப்   பார்த்தேன்.
அப்படி      வருகிறவர்களில்   இந்தியர்களுக்கு       மரியாதை
காட்டப்படுவதில்லை என்பதையும் கவனித்தேன்.அப்துல்லா சேத்தை
அறிந்தவர்கள் அவரிடம்        ஒரு வகையான அகம்பாவத்துடன்
நடந்துகொள்ளுவதையும்     நான் கவனிக்காது போகவில்லை. அது
என்      மனதை வருத்தியது.   ஆனால்,   அப்துல்லா சேத்துக்கு
இதெல்லாம் பழக்கமாகி விட்டது.   என்னைப் பார்த்தவர்களும் அது
போலவே ஏதோ         விசித்திரப் பொருளைப் பார்ப்பது போலப்
பார்த்தனர்.      நான் அணிந்திருந்த உடை,  மற்ற இந்தியரிலிருந்து
என்னை            வேறுபடுத்திக்காட்டியது.   நான் வங்காளிகள்
வைத்துக்கொள்வதைப்        போன்ற    ஒரு   தலைப்பாகையை
வைத்துக்கொண்டு, மேலங்கியும் அணிந்திருந்தேன்.

     என்னைக்   கம்பெனியின்    கட்டடத்திற்கு அப்துல்லா சேத்
அழைத்துச் சென்றார். அவருடைய  அறைக்குப் பக்கத்து அறையில்,
நான் தங்குவதற்கு ஏற்பாடு  செய்திருந்தனர். அவர் என்னை அறிந்து
கொள்ளவில்லை. என்னாலும் அவரை அறிந்துகொள்ள முடியவில்லை.
என் வசம் அவருடைய சகோதரர் அனுப்பியிருந்த    காகிதங்களைப்
படித்துவிட்டு, அவர் இன்னும் அதிகக் குழப்பமடைந்தார்.யானையைக்
கட்டித்      தீனி போடச் சொல்லுவது போல என்னைத் தம்முடைய
சகோதரர் அனுப்பியிருக்கிறார் என்றே