பக்கம் எண் :

பிரிட்டோரியாவுக்குப் போகும் வழியில் 131

Untitled Document
8. பிரிட்டோரியாவுக்குப் போகும் வழியில்

     டர்பனில் இருக்கும் இந்தியக்   கிறிஸ்தவர்களுடன்  எனக்குச்
சீக்கிரத்திலேயே        தொடர்பு ஏற்பட்டது.   கோர்ட்டில் மொழி
பெயர்ப்பாளராக     இருந்த ஸ்ரீபால்,   ஒரு ரோமன் கத்தோலிக்கர்.
அவருடன்      பழக்கம்  வைத்துக் கொண்டேன்.  பிராட்டஸ்டன்டு
மிஷனின் கீழ்,       அப்பொழுது உபாத்தியாராக இருந்த ஸ்ரீசுபான்
காட்பிரேயும் எனக்குப் பழக்கமானார். 1924-இல் இந்தியாவுக்கு வந்த
தென்னாப்பிரிக்கத் தூது     கோஷ்டியினரில் ஒருவராக இருந்த ஸ்ரீ
ஜேம்ஸ் காட்பிரேயின் தந்தையே அவர். அதைபோல், காலஞ்சென்ற
பார்ஸி ருஸ்தம்ஜி,  காலஞ்சென்ற            ஆதம்ஜி  மியாகான்
ஆகியவர்களையும்        அச் சமயத்தில் சந்தித்தேன்.  வியாபார
சம்பந்தமாக அல்லாமல்    இதற்கு முன்னால்    ஒருவரை ஒருவர்
இவர்கள் சந்தித்ததே இல்லை. ஆனால், பின்னால் இந்த நண்பர்கள்
எல்லோரும் நெருங்கிப் பழக நேர்ந்த  விவரத்தைப் போகப் போகப்
பார்ப்போம்.

     இவ்வாறு நான் புதிது     புதிதாக பலருடன் பழக்கம் செய்து
கொண்டு       வந்த சமயத்தில்,    கம்பெனிக்கு அவர்களுடைய
பிரிட்டோரியா வக்கீலிடமிருந்து     ஒரு கடிதம் வந்தது. வழக்கை
நடத்துவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்துகொள்ள வேண்டும்
என்றும்,      அப்துல்லா சேத் பிரிட்டோரியாவுக்கு வர வேண்டும்
என்றும், இல்லாவிடில்  ஒரு பிரதிநிதியையாவது அனுப்ப வேண்டும்
என்றும் வக்கீல் எழுதியிருந்தார்.

     அக்கடிதத்தை     அப்துல்லா சேத்   என்னிடம் கொடுத்துப்
படிக்கச் சொன்னார். பிரிட்டோரியாவுக்குப் போகிறீர்களா?    என்று
என்னைக்     கேட்டார்.  “உங்களிடமிருந்து வழக்குச் சம்பந்தமான
விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகெண்ட பிறகே அதைப் பற்றி நான்
சொல்ல முடியும்” என்றேன். “இப்பொழுது அங்கே    நான் செய்ய
வேண்டியது இன்னது என்பது தெரியவில்லை”    என்றேன். அதன்
பேரில் வழக்குச் சம்பந்தமான விவரங்களை      எனக்கு விளக்கிக்
கூறுமாறு அவர் தமது குமாஸ்தாக்களிடம் கூறினார்.

     இவ் வழக்குச்  சம்பந்தமாக நான்      அரிச்சுவடியிலிருந்தே
ஆரம்பிக்கவேண்டியிருக்கிறது என்பதை    வழக்குப்பற்றித் தெரிந்து
கொள்ள ஆரம்பித்ததுமே  கண்டுகொண்டேன். கப்பலில் வரும்போது
ஜான்ஸிபாரில் சில தினங்கள் தங்கிய சமயத்தில்   அங்கே கோர்ட்டு
வேலைகள் எப்படி நடக்கின்றன என்பதைப் பார்க்கக் கோர்ட்டுக்குச்
சென்றேன்.     அப்பொழுது  ஒரு பார்ஸி வக்கீல்,  ஒரு சாட்சியை
விசாரித்துக்      கொண்டிருந்தார்.  கணக்குப் புத்தகங்களில் கண்ட
பற்று,  வரவு     இனங்களைக் குறித்து  அவர் கேள்விகள் கேட்டு
வந்தார்.    அவையெல்லாம் எனக்குக் கொஞ்சங்கூடப் புரியவில்லை.
கணக்குவைக்கும் முறையைக்