பக்கம் எண் :

136சத்திய சோதனை

Untitled Document
9. மேலும் துன்பங்கள்

     ரெயில்      காலையில்   சார்லஸ் டவுன் சேர்ந்தது.  சார்லஸ்
டவுனுக்கும்  ஜோகன்னஸ்பர்க்குக்கும் இடையே அந்த நாளில் ரெயில்
பாதை இல்லை.    நான்கு சக்கரக் குதிரைக் கோச் வண்டிகளில்தான்
போக வேண்டும். அவ் வண்டி,   வழியில் உள்ள ஸ்டாண்டர்ட்டனில்
விடியும்வரையில் தங்கும்.    அவ் வண்டியில் போக      என்னிடம்
சீட்டு இருந்தது. வழியில் மாரிட்ஸ்பர்க்கில்  ஒரு நாள் தங்கிவிட்டதால்
அது ரத்துச் செய்யப்படவில்லை.அதுவல்லாமல் சார்லஸ் டவுனிலிருந்த
கோச் வண்டி ஏஜண்டுக்கும் அப்துல்லா சேத் தந்தி கொடுத்திருந்தார்.

     ஆனால்,     அந்த ஏஜண்டுக்கு,   என்னை வண்டியில் ஏற்ற
மறுத்துவிடுவதற்கு ஏதாவது   ஒரு சாக்குப்போக்குத்தான் தேவையாக
இருந்தது. ஆகவே நான் அவ்விடத்திற்குப்   புதியவன் என்று கண்டு
கொண்டதும், “உம் டிக்கெட் ரத்தாகி விட்டது”     என்றார்.   நான்
அவருக்குத் தக்க பதில் அளித்தேன்.    எனக்கு இடமில்லை என்று
அவர் மறுத்ததற்குக்      காரணம் வேறு ;  வண்டியில் இடமில்லை
என்பதல்ல.     பிரயாணிகளை வண்டிக்குள்ளேயே உட்கார வைக்க
வேண்டும். ஆனால், நானோ ‘கூலி’ யாகக்  கருதப்பட்டேன். அதோடு
புதியவனாகவும் தென்பட்டேன். எனவே, என்னை   வெள்ளைக்காரப்
பிரயாணிகளுடன்     உட்கார வைக்காமல் இருப்பதுதான் சரி என்று
வண்டித்     ‘தலைவர்’ கருதினார்.கோச் வண்டியின் காரியங்களைக்
கவனித்து வரும் வெள்ளைக்காரருக்குத் ‘தலைவர்’   என்பது பட்டம்.
வண்டியின் பெட்டிமீது   வண்டியோட்டிக்கு இரு பக்கங்களிலும் இரு
ஆசனங்கள் இருந்தன. அவைகளில் ஒன்றில்,   தலைவர் உட்கார்ந்து
கொள்ளுவது வழக்கம். ஆனால்,இன்றோ அவர் உள்ளே உட்கார்ந்து
கொண்டு, அவருடைய இடத்தை எனக்குக் கொடுத்தார். அது பெரிய
அநியாயமும் அவமதிப்பும் ஆகும் என்பதை அறிவேன்.  என்றாலும்,
அதையும்      சகித்துக் கொள்ளுவது நல்லது என்று  நினைத்தேன்.
கட்டாயப்படுத்தி நான் உள்ளே போய் உட்கார்ந்து கொள்ள முடியாது.
வெளியில்  உட்கார                ஆட்சேபித்திருந்தால் என்னை
ஏற்றிக்கொள்ளாமலேயே வண்டி போயிருக்கும்.    அதனால் இன்னும்
ஒரு நாள்      வீணாகியிருக்கும்.   அதற்கு மறுநாள் என்ன நேரும்
என்பதையும் கடவுளே அறிவார்.     ஆகவே,    எனக்குள்ளேயே
ஆத்திரப்     பட்டுக்கொண்டாலும்     அதையெல்லாம்   காட்டிக்
கொள்ளாமல்        வண்டியோட்டிக்குப் பக்கத்தில் உட்கார்ந்தேன்.

     சுமார்    மூன்று மணிக்கு வண்டி,       பார்டேகோப் என்ற
இடத்திற்குப்    போய்ச் சேர்ந்தது.   இப்பொழுது,  ‘தலைவர்’ நான்
உட்கார்ந்திருந்த இடத்தில், தாம்   உட்கார்ந்துகொள்ள விரும்பினார்.
சுருட்டுப் பிடிக்க