பக்கம் எண் :

கிறிஸ்தவர்களுடன் தொடர்பு147

Untitled Document
     ஹாரிஸ், காப் ஆகிய      இருவரும் வயது முதிர்ந்த கன்னிப்
பெண்கள். ஸ்ரீ கோட்ஸ், ‘குவேக்கர்’ என்னும் கிறிஸ்தவ கோஷ்டியைச்
சேர்ந்தவர். முதற்கூறிய இருவரும் சேர்ந்து    ஒரே இடத்தில் வசித்து
வந்தனர். இவர்கள்   ஒவ்வொரு     ஞாயிற்றுக்கிழமையும் மாலை 4
மணிக்குத் தங்கள் வீட்டுக்குத் தேநீர்  சாப்பிட வந்துவிடுமாறு எனக்கு
நிரந்தர அழைப்பு விடுத்தனர்.

     ஞாயிற்றுக்கிழமைகளில்      நாங்கள் சந்திக்கும் போது, அந்த
வாரத்தில்,  சமய ஆராய்ச்சி     சம்பந்தமாக        நான் தெரிந்து
கொண்டவைகளை        ஸ்ரீ கோட்ஸிடம்  கூறுவேன். நான் படித்த
புத்தகங்களையும், அதனால் எனக்கு ஏற்பட்ட கருத்துக்களையும் பற்றி
அவருடன் விவாதிப்பேன். அந்தப் பெண்களோ,  தங்களுக்கு ஏற்பட்ட
இனிமையான அனுபவங்களைப் பற்றிக் கூறுவார்கள்.  தாங்கள் கண்ட
சாந்தியைக் குறித்தும் பேசுவார்கள்.

     ஸ்ரீ கோட்ஸ்,   கபடமற்ற,   உறுதியுள்ள   இளைஞர். நாங்கள்
இருவரும்   சேர்ந்து   உலாவப் போவது உண்டு.   மற்றக் கிறிஸ்தவ
நண்பர்களிடம் அவர் என்னை அழைத்துச் சென்றார்.

     நாங்கள்   ஒருவருக்கொருவர்  நெருங்கிப் பழக   ஆரம்பித்து
விடவே, தமக்குப் பிடித்தமான புத்தகங்கள் எனக்குக்   கிடைக்கும்படி
அவர் செய்தார்.  இவ்விதம் என்னிடம் நிறையப் புத்தகங்கள் சேர்ந்து
விட்டன.    என்  மீது   புத்தகச் சுமையை      ஏற்றினார் என்றே
கூறவேண்டும்.  உண்மையாகவே    அவற்றைப்     படிப்பதாக நான்
ஒப்புக்கொண்டேன். நான் படிக்கப் படிக்கப் படித்தவைகளைக் குறித்து
விவாதித்தும் வந்தோம்.

     அத்தகைய புத்தகங்கள் பலவற்றை நான் 1893 இல்  படித்தேன்.
அவை எல்லாவற்றின்     பெயர்களும் எனக்கு நினைவில்லை.  நான்
படித்தவைகளில் சில, ஸிட்டி   டெம்பிளைச் சேர்ந்த டாக்டர் பார்க்கர்
எழுதிய ‘வியாக்கியானம்’, ஸ்ரீ பியர்ஸன் எழுதிய     ‘நிச்சயமான பல
ருசுக்கள்’,    ஸ்ரீ பட்லர் எழுதிய ‘உபமானங்கள்’ முதலியன. இவற்றில்
சில பகுதிகள்      எனக்கு விளங்கவே இல்லை ;   சில விஷயங்கள்
எனக்குப்   பிடித்திருந்தன ;   மற்றவை   எனக்குப்  பிடிக்கவில்லை.
நிச்சயமான      பல ருசுக்கள் என்ற புத்தகம்,  பைபிளின் மதத்திற்கு
ஆதரவாக, அதன் ஆசிரியர் அறிந்துகொண்ட  பலவகை ருசுக்களைக்
கொண்டது.     இப்புத்தகம் என் மனதைக் கவரவில்லை. பார்க்கரின்,
வியாக்கியானம்,    ஒழுக்கத்தைத்   தூண்டுவதாக இருந்தது. ஆனால்,
நடைமுறையில் இருக்கும்     கிறிஸ்தவக் கோட்பாடுகளில் நம்பிக்கை
இல்லாதவர்களுக்கு   இந் நூல் எவ்வகையிலும் பயன்படாது. பட்லரின்
உபமானங்கள் ஆழ்ந்த கருத்துக்கள்     நிறைந்த கஷ்டமான நூலாக
எனக்குத் தோன்றிற்று. அதைச்            சரியாகப் புரிந்துகொள்ள
வேண்டுமானால்,    நான்கு ஐந்து முறை          படிக்க வேண்டும்.
நாஸ்திகர்களை       ஆஸ்திகர்களாகத் திருப்பிவிடும் நோக்கத்துடன்