பக்கம் எண் :

உயர்நிலைப் பள்ளியில் 15

Untitled Document
5 உயர்நிலைப் பள்ளியில்

     எனக்கு மணமான போது    உயர்நிலைப் பள்ளியில் படித்துக்
கொண்டிருந்தேன் என்று முன்பே        கூறியிருக்கிறேன். நாங்கள்
அண்ணன் தம்பிமார்        மூன்று பேரும் ஒரே பள்ளிக்கூடத்தில்
படித்துக் கொண்டிருந்தோம்.        மூத்த அண்ணன் மிகவும் மேல்
வகுப்பில் படித்தார். என்னோடு   விவாகமான அண்ணனோ எனக்கு
ஒரு வகுப்பு மேலே படித்தார். விவாகத்தால்   எங்கள் இருவருக்கும்
ஓர் ஆண்டு வீணாயிற்று. இதன் பலன் தான்    என் அண்ணனுக்கு
பின்னும்       மோசமானதாகவே    இருந்தது. அவர் படிப்பையே
முற்றும் விட்டு விட்டார்.அவரைப் போல    எத்தனை இளைஞர்கள்
இதே கதிக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதைக் கடவுளே அறிவார்.
இன்றைய நமது  ஹிந்து சமூகத்தில் மட்டுமே படிப்பும் கல்யாணமும்
ஏக காலத்தில் நடைபெறுகின்றன.

     நான் தொடர்ந்து படித்தேன். உயர்நிலைப் பள்ளியில் என்னை
மந்தமானவன் என்று யாருமே              எண்ணவில்லை. என்
உபாத்தியாயர்கள் என்னிடம்            எப்பொழுதும் அன்போடு
இருந்தார்கள். என் படிப்பின்     அபிவிருத்தி, நடத்தை ஆகியவை
பற்றி ஆண்டுதோறும்          பெற்றோருக்கு நற்சாட்சிப் பத்திரம்
அனுப்பப்படும். கெடுதலான       பத்திரம் என்னைக் குறித்து ஒரு
தடவையேனும் வந்ததில்லை. உண்மையில் நான் இரண்டாம் வகுப்புத்
தேறிய பிறகு           பரிசுகளையும் பெற்றேன். ஐந்தாம், ஆறாம்
வகுப்புக்களில் முறையே  நான்கு ரூபாயும், பத்து ரூபாயும் உபகாரச்
சம்பளங்களாகப் பெற்றேன். இவைகளை  நான் அடைந்ததற்கு என்
திறமையை விட என்னுடைய  நல்லதிர்ஷ்டமே காரணம். ஏனெனில்,
இந்த உபகாரச் சம்பளம்   எல்லோருக்கும் உரியதன்று.கத்தியவாரில்
சோராத் பகுதியிலிருந்து வரும்  சிறந்த மாணவர்களுக்கு மாத்திரமே
அது உண்டு.அந்த நாட்களில் நாற்பது முதல் ஐம்பது பேர் வரையில்
கொண்ட ஒரு வகுப்பில் சோராத்திலிருந்து வரும் மாணவர்கள் பலர்
இருப்பதில்லை.

     என் திறமையில்     எனக்குப்         பிரமாதமான மதிப்பு
இருந்ததில்லை என்பதே ஞாபகம். எனக்குப்    பரிசுகளும் உபகாரச்
சம்பளங்களும் கிடைக்கும் போதெல்லாம் நான்   ஆச்சரியப்படுவது
வழக்கம். ஆனால், எனது       நன்னடத்தையை      நான் சர்வ
ஜாக்கிரதையாகக் காப்பாற்றி வந்தேன். இதில் ஒரு      சிறிது குறை
ஏற்பட்டாலும் கண்ணீர்                 விட்டு அழுது விடுவேன்.
கண்டிக்கப்பட்டாலோ,          கண்டிக்கபட வேண்டியவன் என்று
உபாத்தியாயர் கருதினாலோ, என்னால்       சகிக்க முடியாது. ஒரு
தடவை அடிபட்டதாக   எனக்கு நினைவிருக்கிறது. அடிபட்டதற்காக
நான் வருத்தப்படவில்லை ; நான்     அடிபட வேண்டியவன் என்று
கருதப்பட்டதே எனக்கு