பக்கம் எண் :

இந்தியருடன் தொடர்பை நாடினேன் 151

Untitled Document
இருந்ததோ அதே அந்தஸ்து,  சேத் தயாப் ஹாஜி கான் முகமதுக்கும்
பிரிட்டோரியாவில்   இருந்தது.  அவர் இல்லாமல் பொதுஜன காரியம்
எதுவும்      அங்கே நடவாது.  முதல் வாரத்திலேயே நான் அவரை
அறிமுகம் செய்துகொண்டேன்.பிரிட்டோரியாவில் இருக்கும்  ஒவ்வோர்
இந்தியருடன் தொடர்பு      வைத்துக்கொள்ள நான்  விரும்பியதைக்
குறித்து அவரிடம் கூறினேன்.    அங்கே இந்தியரின்  நிலைமையைத்
தெரிந்துகொள்ள     நான்    ஆசைப்படுவதாகவும்    அவருக்குத்
தெரிவித்தேன்.  இந்த       முயற்சியில் எனக்கு அவருடைய உதவி
வேண்டும் என்றும் கோரினேன். உதவியளிக்க அவரும் மகிழ்ச்சியுடன்
ஒப்புக்கொண்டார்.

     பிரிட்டோரியாவில்    இருக்கும் எல்லா   இந்தியரையும் கூட்டி
வைத்து, டிரான்ஸ்வாலில்   அவர்களுக்கு இருந்த நிலையை எடுத்துக்
கூறுவது என்பது எனது முதல் வேலை.     இக்கூட்டம், சேத் ஹாஜி
முகமது    ஜூஸப்        வீட்டில் நடந்தது.  அவருக்கு  என்னை
அறிமுகப்படுத்தும்      கடிதம் ஒன்றும்       என்னிடம் இருந்தது.
இக்கூட்டத்திற்கு மிகச் சில     ஹிந்துக்களும் வந்திருந்தனரெனினும்
பிரதானமாக மேமன் வர்த்தகர்களே   வந்திருந்தார்கள். உண்மையில்
பிரிட்டோரியாவில் இந்துக்கள் மிகச் சிலரே இருந்தனர்.

     இக்கூட்டத்தில்  நான்   ஆற்றிய    சொற்பெருக்கே    என்
வாழ்க்கையில்   நான் செய்த   முதல் பிரசங்கம் எனலாம். அங்கே
பேசுவதற்குச்   சுமாராக   விஷயத்தைத் தயார்   செய்துகொண்டே
போனேன். நான் பேசிய விஷயம்,  வியாபாரத்தில்    உண்மையைக்
கடைப்பிடித்தலைப்        பற்றியது.  வியாபாரத்தில்  உண்மையாக
நடந்துகொள்ளுவதென்பது           சாத்தியமானதே அல்ல என்று
வர்த்தகர்கள்   கூறிவருவதை    நான்   எப்பொழுதும்     கேட்டு
வந்திருக்கிறேன். அப்படிச் சாத்தியமில்லை என்று நான் அப்பொழுது
நினைத்ததில்லை;   இப்பொழுதும் நினைக்க வில்லை.  வியாபாரமும்
உண்மையும்    ஒன்றுக்கொன்று   பொருந்தாதவை என்று சொல்லும்
வர்த்தக நண்பர்கள்    இன்றும் இருக்கிறார்கள். வியாபாரம், முற்றும்
உலக விவகாரம் என்றும்,   சத்தியமோ மதத்தைப் பற்றியது என்றும்
சொல்லுகிறார்கள்.   உலக    விவகாரத்திற்கு  மத விஷயம் முற்றும்
வேறானது     என்றும் வாதிக்கின்றனர்.   வியாபாரத்தில் சுத்தமான
உண்மைக்கே   இடமில்லை.  உசிதமான   அளவுக்குத்தான்  அதில்
உண்மை பேச      முடியும் என்கின்றனர்.  அவர்களுடைய அந்தக்
கொள்கையை நான்      என்னுடைய     சொற்பொழிவில் பலமாக
எதிர்த்தேன். வர்த்தகர்களுக்கு அவர்களுடைய கடமை உணர்ச்சியை
எழுப்பினேன்.      அக்கடமை இரு வகையானது.  அங்குள்ள சில
இந்தியரின் நடத்தையே,            அவர்களுடைய தாய் நாட்டின்
கோடிக்கணக்கான   சகோதர    மக்களின் தன்மையை இந்நாட்டார்
அறிவதற்கு அளவுகோல் ஆகிறது. ஆகையால், ஓர் அந்நிய நாட்டில்
உண்மையுள்ளவர்களாக