பக்கம் எண் :

158சத்திய சோதனை

Untitled Document
போட்டுப்   பார்ப்பது   என்பதைக்    குறித்து    இந்தியர்களுடன்
விவாதித்தேன்.

     இவ்விதம் அங்கே இந்தியருக்கு இருந்து வந்த மிகக் கஷ்டமான
நிலையை,      அதைப்பற்றிப் படிப்பதனாலும் கேள்விப்படுவதனாலும்
மாத்திரம் அன்றி, என்     சொந்த அனுபவங்களினாலும் மிக நன்றாக
அறிந்துகொண்டேன்.   தென்னாப்பிரிக்கா,        சுயமரியாதையுள்ள
இந்தியனுக்கு உகந்த நாடன்று  என்பதைக் கண்டேன்.     இத்தகைய
நிலைமையில் மாறுதல் ஏற்படும்படி செய்வது எப்படி என்ற கேள்வியே
என் மனத்தில் மேலும் மேலும்   எழுந்தவண்ணம் இருந்தது. ஆனால்,
அப்பொழுது          என்னுடைய   முதன்மையான  கடமை தாதா
அப்துல்லாவின் வழக்கைக் கவனிப்பதே.

14. வழக்குக்கான தயாரிப்பு

     பிரிட்டோரியாவில்   நான்   இருந்த  அந்த   ஓராண்டு, என்
வாழ்க்கையிலேயே      மிக மதிப்பு வாய்ந்த அனுபவத்தை எனக்கு
அளித்தது.     பொதுஜனப் பணியைக்   கற்றுக்கொள்ளும் வாய்ப்பு
எனக்கு இங்கேதான் கிடைத்தது. இங்கே அச்சேவைக்கான  ஓரளவு
ஆற்றலையும்    பெற்றேன்.   என்னுள்      சமய உணர்ச்சி ஜீவ
சக்தியுள்ளதாக     ஆனதும் இங்கேதான். மேலும், வக்கீல் தொழில்
சம்பந்தமான உண்மையான ஞானத்தையும் இங்கேதான் அடைந்தேன்.
தொழிலுக்குப் புதிதாக வரும் ஒரு பாரிஸ்டர்,   அனுபவமுள்ள  ஒரு
பாரிஸ்டரிடம்     அறிந்துகொள்ளும் விஷயங்களை இங்கே அறிந்து
கொண்டேன்.    வக்கீல் தொழிலை என்னால் நடத்த முடியும் என்ற
நம்பிக்கையும்    எனக்கு இங்கேதான் ஏற்பட்டது. அதே போல ஒரு
வக்கீலின் வெற்றிக்கான ரகசியங்களையும்   இங்கேதான் அறிந்தேன்.

     தாதா அப்துல்லாவின் வழக்கு,  சிறிய வழக்கே அல்ல. 40,000
பவுன் கிடைக்க வேண்டும்       என்று வழக்குத் தொடரப்பட்டது.
வியாபாரத்தின் கொடுக்கல்     வாங்கலில் இவ்வழக்கு ஏற்பட்டதால்
கணக்குச் சம்பந்தமான      நுணுக்கங்கள் இதில் அதிகம் இருந்தன.
வழக்கிடப்பட்ட தொகையில் ஒரு பகுதி பிராமிசரி  நோட்டுக்காகவும்,
பிராமிசரி  நோட்டுகள்  தருவதாகக்   கூறியதற்கும்   வரவேண்டிய
தொகை.  பிராமிசரி நோட்டுகள்      மோசடியாக வாங்கப்பட்டவை,
அவற்றிற்குப் போதுமான நியாயம் இல்லை என்பது பிரதிவாதி தரப்பு
வாதம்.  இந்தச் சிக்கலான  வழக்கில் உண்மையையும் சட்டத்தையும்
பற்றிய விஷயங்கள் ஏராளமாக அடங்கியிருந்தன.

     இரு தரப்பாரும் பெரிய  அட்டர்னிகளையும்  வக்கீல்களையும்
அமர்த்தியிருந்தனர்.        ஆகவே,   அவர்கள் வேலை செய்யும்
விதத்தைத் தெரிந்துகொள்ளுவதற்கு      எனக்குச் சிறந்த வாய்ப்புக்
கிடைத்தது. வாதியின் கட்சியை   அட்டர்னிக்கு எடுத்துக் கூறுவதும்,
வழக்குச் சம்பந்தமான     ஆதாரங்களைச் சேகரிப்பதுமான வேலை
என்னிடம்