பக்கம் எண் :

162சத்திய சோதனை

Untitled Document
ஒப்புக்கொள்ள  வேண்டும்.  அவரும் இணங்கினார்.     நீண்டகாலத்
தவணையில் தயாப் சேத்            பணம் கட்டுவதை அனுமதிக்க
ஒப்புக்கொண்டார். வழக்கை,      மத்தியஸ்தத்திற்கு விடுவதற்கு இரு
தரப்பினரும்     சம்மதிக்கும்படி   செய்வதைவிடத்    தொகையைத்
தவணையில்      செலுத்துவது என்ற   சலுகையைப் பெறுவதில்தான்
எனக்கு அதிகச்   சிரமம் இருந்தது.  ஆனால்,   ஏற்பட்ட முடிவைக்
குறித்து,    இரு தரப்பாரும்          மகிழ்ச்சி அடைந்தனர். பொது
ஜனங்களிடையே அவர்களுடைய       மதிப்பும் உயர்ந்தது. எனக்கு
ஏற்பட்ட ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை.   உண்மையான வக்கீல்
தொழிலை          நான்   கற்றுக்கொண்டேன்.  பிளவுபட்டிருக்கும்
கட்சிக்காரர்களை   ஒன்றாக்குவதே வக்கீலின் உண்மையான வேலை
என்பதை உணர்ந்து கொண்டேன்.   இந்தப் பாடம் என்னுள் அழிக்க
முடியாதபடி நன்றாகப் பதிந்துவிட்டது. ஆகையால்,  நான் வக்கீலாகத்
தொழில்   நடத்திய   இருபது   ஆண்டுகளில்   நூற்றுக்கணக்கான
வழக்குகளில்,   தனிப்பட்ட   முறையில்   சமரசம்         செய்து
வைத்துவிடுவதிலேயே       என் காலத்தின் பெரும் பகுதி கழிந்தது.
இதனால் எனக்கு நஷ்டம் எதுவுமே இல்லை. பண நஷ்டமும் இல்லை;
நிச்சயமாக ஆன்ம நஷ்டம் இல்லவே இல்லை.

15. சமய எண்ணத்தின் எழுச்சி

     கிறிஸ்தவ நண்பர்களிடம் எனக்கு  ஏற்பட்ட  அனுபவங்களைக்
குறித்தும்   திரும்பவும் சொல்ல வேண்டிய      சமயம் இப்பொழுது
ஏற்பட்டிருக்கிறது.

     எனது வருங்காலத்தைப்      பற்றிய  கவலை ஸ்ரீ பேக்கருக்கு
அதிகமாகிக் கொண்டு வந்தது. வெல்லிங்டனில்   நடந்த மகாசபைக்கு
அவர் என்னை அழைத்துச் சென்றார்.சமயத் தெளிவைப் பெறுவதற்கு
அதாவது வேறுவிதமாகச்     சொன்னால் சுயத் தூய்மையைப் பெறும்
பொருட்டு என்று        புராட்டஸ்டண்டு கிறிஸ்தவர்கள், இத்தகைய
மகாசபைகளைச் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை கூட்டுவது வழக்கம்.
சமயத்தைச் சீராக்குவது அல்லது சமய புனருத்தாரணம் என்று இதைச்
சொல்லலாம்.        வெல்லிங்டன்    மகாசபையும் இந்த வகையைச்
சேர்ந்ததுதான்.   அந்த     மகாசபைக்குத்    தலைமை தாங்கியவர்
அப் பகுதியில்              பிரசித்தமாயிருந்த பாதிரியாரான பூஜ்ய
ஆண்ட்ரு மர்ரே   என்பவர். அந்த மகா சபையில் இருக்கும் பக்திப்
பரவசச் சூழ்நிலையும்,     அதற்கு வந்திருப்பவர்களின்  உற்சாகமும்
சிரத்தையும் என்னைக் கட்டாயம்    கிறிஸ்தவ மதத்தைத் தழுவும்படி
செய்தே தீரும் என்று ஸ்ரீ பேக்கர் நம்பியிருந்தார்.

     அவருடைய முடிவான   நம்பிக்கையெல்லாம் பிரார்த்தனையின்
சக்தியிலேயே இருந்தது. பிரார்த்தனையில் அவர் திடமான