பக்கம் எண் :

170சத்திய சோதனை

Untitled Document
17. நேட்டாலில் குடியேறினேன்

     1893-இல் சேத் ஹாஜி      முகமது ஹாஜி தாதா,   நேட்டால்
இந்தியரிடையே   தலைசிறந்த   தலைவராகக் கருதப்பட்டார். செல்வ
விஷயத்தில் பார்த்தால்         இந்தியரில் முதன்மையானவர் சேத்
அப்துல்லா ஹாஜி ஆதம். ஆனால், இருவரும் மற்றவர்களும் பொதுக்
காரியங்களில்        சேத் ஹாஜி முகமதுவுக்கே முதலிடம் அளித்து
வந்தனர்.   ஆகவே, அவருடைய தலைமையில், அப்துல்லா சேத்தின்
வீட்டில் ஒரு    பொதுக் கூட்டம் நடந்தது.  வாக்காளர் மசோதாவை
எதிர்ப்பது என்று அதில் தீர்மானமாயிற்று.

     தொண்டர்கள் சேர்க்கப்பட்டனர். நேட்டாலில் பிறந்தவர்களான
இந்தியர் அதாவது பெரும்பாலும் இந்தியக்   கிறிஸ்தவ இளைஞர்கள்
அக் கூட்டத்திற்கு     அழைக்கப்பட்டனர். டர்பன் நீதிமன்ற மொழி
பெயர்ப்பாளரான ஸ்ரீ பாலும்,   ஒரு மிஷன் பாடசாலை ஆசிரியரான
ஸ்ரீ சுபான் காட்பிரேயும் இக்கூட்டத்திற்கு  வந்திருந்தனர். ஏராளமான
கிறிஸ்தவ   இளைஞர்கள்      அக்கூட்டத்திற்கு      வருவதற்குப்
பொறுப்பாளிகளாக    இருந்தவர்கள் இவர்கள் இருவருமே. இவர்கள்
எல்லோரும் தொண்டர்களாகப் பதிவு செய்து கொண்டார்கள். உள்ளூர்
வர்த்தகர்கள் பலரும் தொண்டர்களாகப் பதிவு செய்து கொண்டார்கள்.

     சேத்துகள் தாவூது முகமது, முகமது காசிம் கம்ருதீன் ஆதம்ஜி
மியாகான்,  ஏ. குழந்தை வேலுப் பிள்ளை, ஸி. லச்சிராம், ரங்கசாமிப்
படையாச்சி,    ஆமத் ஜீவா      ஆகியவர்கள்     பதிவு செய்து
கொண்டவர்களில்      குறிப்பிடத்தக்கவர்கள். பார்ஸி, ருஸ்தம்ஜியும்
அவர்களுள்     ஒருவராக      இருந்தார்.     சேர்ந்து கொண்ட
குமாஸ்தாக்களில்      ஸ்ரீமான்கள் மாணேக்ஜி, ஜோஷி, நரசிங்கராம்
முதலியவர்களும்,     தாதா அப்துல்லா கம்பெனி   முதலிய பெரிய
கம்பெனிகளில்       வேலை பார்த்தவர்களும்   இருந்தனர். பொது
வேலையில் தாங்களும்      பங்கெடுத்துக் கொள்ளுவதைக் குறித்து,
இவர்கள்       எல்லோரும்   மகிழ்ச்சியடைந்ததோடு ஆச்சரியமும்
அடைந்தார்கள்.    இவ்விதம் பங்கு கொள்ள    அழைக்கப்படுவது,
அவர்களுடைய வாழ்க்கையிலேயே ஒரு புது அனுபவம். சமூகத்திற்கு
ஏற்பட்டிருக்கும்      ஆபத்தானதோர் வேளையில்  உயர்வு, தாழ்வு;
சிறியவர்கள்,   பெரியவர்கள்;   எஜமான்,  வேலைக்காரன்;  ஹிந்து,
முஸ்லிம்;    பார்ஸி கிறிஸ்தவர்;   குஜராத்திகள்,       மதராஸிகள்,
சிந்துக்காரர்கள் என்ற     பாகுபாடுகளையெல்லாம் மறந்து விட்டனர்.
எல்லோரும் ஒரே மாதிரியாக தாய்நாட்டின் குழந்தைகள்; சேவகர்கள்.
மசோதா இரண்டாம் முறையாகச்   சட்டசபையில் நிறைவேறி விட்டது,
அல்லது நிறைவேற இருக்கும் தருணத்தில் இருந்தது