பக்கம் எண் :

நேட்டால் இந்தியர் காங்கிரஸ்179

Untitled Document
கோர்ட்டில் இருக்கும் ஒரு வழக்கத்தை அந்தக் கோர்ட்டில் தொழில்
செய்யும் நான் மதிக்க மறுப்பது        நேர்மையானதல்ல” என்றும்
சொன்னேன்.

     இவ்வாறும்,   இது போன்ற   வாதங்களினாலும் நண்பர்களை
ஒருவாறு        சமாதானப்படுத்தினேன். ஆனால்,  வெவ்வேறான
விஷயங்களை வெவ்வேறான நோக்குடன் கவனித்து   முடிவுசெய்ய
வேண்டும் என்ற கொள்கையை இக்காரியத்திலும்     அனுசரிப்பது
என்பதில், அவர்களுக்கு       நான் திருப்தி உண்டாக்கிவிட்டதாக
கருதவில்லை. எனினும்,        சத்தியத்தை நான் விடாப்பிடியாகப்
பின்பற்றியதால்,     சமரசத்திலுள்ள அழகை      என் வாழ்நாள்
முழுவதிலுமே உணரும் சக்தியை அது எனக்கு    அளித்துவிட்டது.
இந்தச் சமரச உணர்ச்சி, சத்தியாக்கிரகத்தில் ஓர் அத்தியாவசியமான
பகுதி என்பதை என் வாழ்க்கையில்     நான் பின்னால் கண்டேன்.
இதனால் அடிக்கடி           என் உயிருக்கே ஆபத்தைத் தேடிக்
கொள்ளவும்,    நண்பர்களின்     வருத்தத்திற்கு     ஆளாகவும்
நேர்ந்திருக்கிறது.     ஆனால்,   சத்தியமானது   பூத்த மலர்போல்
மென்மையானதே ஆயினும், கல்போல் கடினமானதும் ஆகும்.

19. நேட்டால் இந்தியர் காங்கிரஸ்

     வக்கீல் தொழில் எனக்கு    இரண்டாம் பட்சமான வேலையாக
இருந்து வந்தது. நேட்டாலில் நான்      தங்கியது நியாயம் என்றால்,
பொதுஜன வேலையில் நான் அதிகக் கவனம் செலுத்துவது அவசியம்.
வாக்குரிமையைப் பறிக்கும்          மசோதா சம்பந்தமாக மகஜரை
அனுப்பியது மாத்திரம் போதாது.     குடியேற்ற நாட்டுமந்திரி, இதில்
கவனம் செலுத்தும்படி செய்வதற்கு    இடைவிடாது கிளர்ச்சி செய்து
கொண்டிருப்பதும் அத்தியாவசியம் ஆகும்.   இக்காரியத்திற்காக ஒரு
நிரந்தரமான ஸ்தாபனம் இருப்பது முக்கியம் என்று கருதினேன். சேத்
அப்துல்லாவையும் மற்ற நண்பர்களையும்   கலந்து ஆலோசித்தேன்.
நிரந்தரமான ஒரு பொது ஸ்தாபனத்தை ஆரம்பிப்பது என்று நாங்கள்
எல்லோரும் முடிவுக்கு வந்தோம்.

     இந்தப்     புதிய ஸ்தாபனத்திற்கு   என்ன பெயர் கொடுப்பது
என்பது சதா என் மனத்தை அலட்டிவந்தது. எந்த   ஒரு குறிப்பிட்ட
கட்சிச் சார்பும் உள்ளதாக இது   இருக்கக் கூடாது. காங்கிரஸ் என்ற
பெயர்,         இங்கிலாந்தில்   இருக்கும்   கன்ஸர்வேடிவ்களுக்கு
வெறுப்பானதாக          இருந்தது என்பதை அறிவேன். என்றாலும்
இந்தியாவுக்கு      ஜீவனாக இருப்பதே காங்கிரஸ்தான். நேட்டாலில்
அப்பெயரைப் பிரபலப்படுத்த விரும்பினேன். அப்பெயரை  வைக்கத்
தயங்குவது கோழைத்தனம் என்று எனக்குத் தோன்றிற்று. ஆகையால்,
அந்த ஸ்தாபனத்திற்கு, ‘நேட்டால் இந்தியர்