பக்கம் எண் :

184சத்திய சோதனை

Untitled Document
இந்தியருக்கு   ஏராளமானவர்கள் நண்பர்கள் ஆயினர்.  இந்தியாவில்
இருந்த   எல்லாக் கட்சியினரின் தீவிரமான அனுதாபமும் கிடைத்தது.
அத்துடன்   தென்னாப்பிரிக்க இந்தியர், திட்டமான  நடவடிக்கையில்
இறங்குவதற்கு        ஒரு வழியும் ஏற்பட்டு,   வேலைத் திட்டமும்
உருவாயிற்று.

20. பாலசுந்தரம்

     மனப்பூர்வமாகக்   கொள்ளும்   புனிதமான ஆசை  எதுவும்
நிறைவேறி விடுகிறது.    இந்த விதி உண்மையானது என்பதை என்
சொந்த  அனுபவத்தில்   நான்     அடிக்கடி    கண்டிருக்கிறேன்.
ஏழைகளுக்குச் சேவை செய்யவேண்டும் என்பதே என் உள்ளத்தின்
அத்தியந்த   ஆசை.  அந்த ஆசை,  என்னை     எப்பொழுதும்
ஏழைகளின்     நடுவில் கொண்டு    போய்ச் சேர்த்தது. அதனால்,
அவர்களில் ஒருவனாக     என்னைஆக்கிக் கொள்ளவும் முடிந்தது.

     தென்னாப்பிரிக்காவிலேயே பிறந்த இந்தியரும், குமாஸ்தாக்கள்
வகுப்பினரும், நேட்டால்  இந்தியர் காங்கிரஸில் அங்கத்தினர்களாக
இருந்தபோதிலும்      நுட்பப் பயிற்சி பெறாதவர்களான சாதாரணத்
தொழிலாளரும், ஒப்பந்தத் தொழிலாளரும்    அதில் இன்னும் இடம்
பெறாமலேயே இருந்துவந்தனர். சந்தா கொடுத்துச்  சேர்ந்து, அதன்
அங்கத்தினர்கள் ஆகிவிட அவர்களால் இயலாது.   அவர்களுக்குச்
சேவை செய்வதன் மூலமே, காங்கிரஸ்   அவர்களுடைய அன்பைப்
பெற  முடியும்.  அதற்கு    நானோ காங்கிரஸோ தயாராக இல்லாத
தருணத்தில் அதற்கான வாய்ப்பு,     தானே வந்து சேர்ந்தது. நான்
வக்கீல் தொழிலை நடத்த   ஆரம்பித்து மூன்று,  நான்கு மாதங்கள்
கூட       ஆகவில்லை.  காங்கிரஸு ம் இன்னும் அதன் குழந்தைப்
பருவத்தில்தான்      இருந்தது.  அப்பொழுது  ஒரு தமிழர், கந்தை
அணிந்து,      முண்டாசுத் துணியைக்  கையில் வைத்துக்கொண்டு,
முன்னம்       பற்கள்  இரண்டும் உடைந்துபோய், ரத்தம் வழியும்
கோலத்தில் நடுங்கிக்கொண்டும் அழுது கொண்டும் என்   முன்னே
வந்து  நின்றார்.    அவர்,    தம்முடைய எஜமானால் கடுமையாக
அடிக்கப்பட்டிருந்தார். என் குமாஸ்தா    ஒரு தமிழர். அவர் மூலம்
எல்லா விவரங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டேன். வந்தவரின்
பெயர் பாலசுந்தரம்.    டர்பனில் குடியிருப்பவரான ஒரு பிரபலமான
ஐரோப்பியரின்    கீழ் அவர்   ஒப்பந்தத் தொழிலாளியாக வேலை
செய்துவந்தார்.         அவருடைய  எஜமான் அவர் மீது கோபம்
கொண்டார். அத்து மீறிப்போய், பாலசுந்தரத்தைப் பலமாக  அடித்து,
அவருடைய முன்னம் பற்கள் இரண்டை உடைத்துவிட்டார்.

     அவரை ஒரு   டாக்டரிடம் அனுப்பினேன்.    அந்த நாளில்
வெள்ளைக்கார டாக்டர்களே உண்டு. பாலசுந்தரத்திற்கு