பக்கம் எண் :

இரு ஆர்வங்கள்207

Untitled Document
மிக ஆபாசமாக இருந்தன. நாங்கள் கூறிய யோசனைகளை எவ்வளவு
தூரம் அந்த     அர்ச்சகர் நிறைவேற்றிவைத்தார் என்பதைப் பார்க்க
நான் அதிக நாட்கள் ராஜ்கோட்டில் இல்லை.

     கடவுளை வழிபடும்   இடங்களில் கூட அவ்வளவு அசுத்தங்கள்
இருப்பதைக் கண்டு மனவேதனைப்பட்டேன்.   தெய்வீகமானது என்று
கருதப்படும் ஓர் இடத்தில் சுகாதார  விதிகள் கவனமாக நிறைவேற்றப்
பட்டிருக்கும் என்றே யாரும் எதிர்பார்ப்பார்கள். அகம்,  புறம் ஆகிய
இரு தூய்மைகளும் இருக்கவேண்டியது முக்கியம் என்று     ஸ்மிருதி
கர்த்தாக்கள் மிகவும்       வற்புறுத்திக் கூறியிருக்கிறார்கள் என்பதை
அப்பொழுதே நான் அறிந்திருந்தேன்.

26. இரு ஆர்வங்கள்

     பிரிட்டிஷ் அரசியல் முறைகளிடம்  எனக்கு இருந்த அவ்வளவு
விசுவாசத்தைப்போல்   வேறு       யாருக்கும்    இருந்ததாக நான்
அறிந்ததில்லை. சத்தியத்தினிடம் எனக்கு   இருந்த பற்றே இத்தகைய
விசுவாசத்திற்கு    அடிப்படையாக இருந்தது        என்பதை நான்
அப்பொழுது  காண  முடிந்தது. விசுவாசமோ, வேறு ஒரு நற்குணமோ
என்னிடம்        இருப்பதாக நடிப்பது என்பது மாத்திரம் என்னால்
என்றுமே        ஆகாது.    நேட்டாலில் நான் போகும் ஒவ்வொரு
பொதுக்கூட்டத்திலும் ராஜ      வாழ்த்துக் கீதம் பாடப்படும். அதைப்
பாடுவதில் நானும்     கலந்துகொள்ள வேண்டும் என்று அப்பொழுது
நான் எண்ணினேன்.     பிரிட்டிஷ் ஆட்சியில் இருக்கும் குறைகளை
நான்   அறியவில்லை என்பதல்ல. ஆனால்,  மொத்தத்தில் பார்த்தால்
அந்த ஆட்சி,      ஏற்றுக் கொள்ளக் கூடியதே என்று நினைத்தேன்.
பொதுவாக பிரிட்டிஷ் ஆட்சி,    ஆளப்படுவோருக்கு நன்மையானது
என்றும் அந்த நாட்களில் நம்பினேன்.

     தென்னாப்பிரிக்காவில் நிற வெறியைக் கண்டேன். ஆனால் அது
பிரிட்டிஷ்    பாரம்பரிய குணத்திற்கு மாறுபட்டது என்று கருதினேன்.
அது    தற்காலிகமானது,  தென்னாப்பிரிக்காவில் மாத்திரம் இருப்பது
என்று நம்பினேன்.         ஆகையால்,  ஆங்கிலேயருடன் போட்டி
போட்டுக்கொண்டு,      மன்னரிடம்     விசுவாசம் காட்டினேன்.ராஜ
வாழ்த்துக் கீதத்தின் மெட்டைக்   கவனத்துடனும் விடாமுயற்சியுடனும்
கற்றுக்கொண்டேன்.    அக்கீதம்    பாடப்படும் போதெல்லாம் நானும்
சேர்ந்து பாடி   வந்தேன். ஆர்பாட்டமும் வெளிப்பகட்டும்  இல்லாமல்
ராஜவிசு வாசத்தைத்   தெரிவிக்கும் சமயம் வந்தபோதெல்லாம் அதில்
நானும் தயங்காது பங்குகொண்டேன்.

     இந்த      விசுவாசத்தை என்   வாழ்க்கையில் என்றுமே நான்
பயன்படுத்திக்    கொண்டதில்லை.  அதைக் கொண்டு சுய லாபத்தை
அடைவதற்கு நான் என்றும் நாடியதும் இல்லை.விசுவாசம்