பக்கம் எண் :

218சத்திய சோதனை

Untitled Document
29. விரைவில் திரும்புங்கள்

     சென்னையிலிருந்து       கல்கத்தாவுக்குப் போனேன். அங்கே
சங்கடங்கள் என்னைச் சூழ்ந்துகொண்டன.       யாரையுமே அங்கே
எனக்குத் தெரியாது. ஆகவே, கிரேட் ஈஸ்டர்ன்    ஹோட்டலில் ஓர்
அறையை         அமர்த்திக் கொண்டேன்.   ‘டெயிலி டெலிகிராப்’
பத்திரிகையின்         பிரதிநிதியுடன்   அங்கே எனக்குப் பழக்கம்
உண்டாயிற்று.        தாம் தங்கியிருந்த   ஐரோப்பியரின் ‘பெங்கால்
கிளப்’புக்கு என்னை அழைத்தார்.       அந்தக் கிளப்பின் பிரதான
அறைக்கு இந்தியர் எவரையும்       அழைத்துக்கொண்டு இருக்கும்
ஆங்கிலேயர், இத்தகைய துவேஷம் காட்டி வருவதைக்குறித்துத் தமது
வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டார்.  பிரதான அறைக்கு என்னை
அழைத்துக் கொண்டு   போக முடியாது போய் விட்டதற்கு என்னிடம்
மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

     வங்காளத்தின் தெய்வம் என்று           வழங்கப்பட்டு வந்த
சுரேந்திரநாத் பானர்ஜியை     நான் பார்க்க விரும்பினேன். அவரைச்
சந்தித்தேன். பல நண்பர்கள்    அவரைச் சூழ்ந்துக் கொண்டிருந்தனர்.
அவர் கூறியதாவது:

     “உங்கள் வேலையில்       மக்கள் சிரத்தை எடுத்துக்கொள்ள
மாட்டார்கள் என்றே அஞ்சுகிறேன்.    இங்கே எங்களுக்கு இருக்கும்
கஷ்டங்கள் கொஞ்சம் அல்ல       என்பதை நீங்களும் அறிவீர்கள்.
என்றாலும்,உங்களால் முடிந்த வரையில் நீங்கள் முயலவே வேண்டும்.
மகாராஜாக்களின் ஆதரவை நீங்கள்     தேடிக் கொள்ள வேண்டும்.
பிரிட்டிஷ்           இந்தியர்     சங்கப் பிரதிநிதிகளைச் சந்திக்கத்
தவறிவிடாதீர்கள். ராசா ஸ்ர் பியாரி மோகன் முகர்ஜியையும் மகாராஜா
டாகுரையும்  நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டும். அவர்கள் இருவரும்
தாராள மனம் படைத்தவர்கள்; பொது வேலையில் அவர்களுக்கு நல்ல
ஈடுபாடு உண்டு.”

     அந்தக் கனவான்களையும் பார்த்தேன். ஆனால், ஒன்றும் பயன்
இல்லை. அவர்கள் என்னைச் சரியாக    ஏற்றுப் பேசக்கூட இல்லை.
கல்கத்தாவில் பொதுக்கூட்டம் நடத்துவது என்பது எளிதான காரியமே
அல்ல என்றார்கள். ஏதாவது செய்ய முடியும் என்றால் அது நடப்பது
முக்கியமாகச் சுரேந்திரநாத்      பானர்ஜியையே பொறுத்தது என்றும்
கூறினர்.

     என் வேலை வர வர அதிகக் கஷ்டமாகிக்கொண்டு வருவதைக்
கண்டேன். ‘அமிர்த பஜார்’ பத்திரிகையின்       காரியாலயத்திற்குப்
போனேன். அங்கே நான் சந்தித்த ஆசிரியக்