பக்கம் எண் :

புயல்225

Untitled Document
அவர்களுக்கு ஆறுதல் கூறி       உற்சாகப்படுத்தி வந்தேன். புயல்
நிலைமையைக் குறித்துக் காப்டன்   கூறிய தகவலைப் புயல் அடித்த
போது மணிக்கு மணி அவர்களுக்குக் கூறுவேன். இவ்விதம் ஏற்பட்ட
நட்பு, எவ்வளவு தூரம்       எனக்கு உதவியாக இருந்தது என்பதை
பின்னால் கவனிப்போம்.

     டிசம்பர் 18 அல்லது 19 ஆம் தேதி           கப்பல் டர்பன்
துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சியது.       ‘நாதேரி’ என்ற கப்பலும்
அன்றே வந்து சேர்ந்தது.

     ஆனால், உண்மையான         புயல் இனிமேல்தான் அடிக்க
வேண்டியிருந்தது!

2. புயல்

     டிசம்பர் 18 ஆம் தேதி, இரு கப்பல்களும்  டர்பன் துறைமுகம்
வந்து சேர்ந்தன       என்பதைக் கவனித்தோம். தென்னாப்பிரிக்கத்
துறைமுகங்களில்              நன்றாக   வைத்தியப் பரிசோதனை
செய்யப்படுவதற்கு          முன்,           பிரயாணிகள் இறங்க
அனுமதிக்கப்படுவதில்லை. தொத்து      நோயால் பீடிக்கப் பட்டவர்
எவராவது கப்பலில்     இருந்தால், அந்தக் கப்பலிலிருந்து யாரையும்
இறங்கவிடாமல் குறிப்பிட்ட காலத்திற்கு   வைத்தியக் கண்காணிப்பில்,
தூரத்தில் நிறுத்தி வைத்து       விடுவார்கள். நாங்கள் கப்பல் ஏறிய
சமயத்தில் பம்பாயில்      பிளேக் நோய் பரவி இருந்ததால், கொஞ்ச
காலத்திற்கு இந்த விதமான ‘சுத்திகரண’த்திற்கு     நாங்கள் ஆளாக
நேரலாம் என்று பயந்தோம். வைத்தியப் பரிசோதனைக்கு  முன்னால்,
ஒவ்வொரு கப்பலிலும் ஒரு   மஞ்சள் நிறக் கொடி பறக்க வேண்டும்.
யாருக்கும் நோய் இல்லை என்று      டாக்டர் அத்தாட்சி கொடுத்த
பிறகே அக்கொடி இறக்கப்படும்.  அந்த மஞ்சள் கொடியை இறக்கிய
பின்னரே பிரயாணிகளின் உற்றார்    உறவினர்கள் கப்பலுக்குள் வர
அனுமதிக்கப்படுவார்கள்.

     அதன்படி எங்கள் கப்பலிலும் மஞ்சள் கொடி பறந்தது. டாக்டர்
வந்து, எங்களைப் பரிசோதித்துப் பார்த்தார்.     ‘ஐந்து நாட்களுக்கு
இக்கப்பலிலிருந்து     யாரையும் இறங்க அனுமதிக்கக்கூடாது’ என்று
டாக்டர் உத்தரவிட்டார். ஏனெனில்,   பிளேக் கிருமிகள் வளருவதற்கு
அதிகபட்சம் இருபத்து       மூன்று நாட்கள் ஆகும் என்பது அவர்
கருத்து. ஆகையால், எங்கள்      கப்பல் பம்பாயிலிருந்து புறப்பட்டு
இருபத்து      மூன்றாம் நாள் முடியும்       வரையில் அதிலிருந்து
பிரயாணிகளை இறக்காமல் தனித்து வைக்குமாறு உத்தரவிட்டார். இந்த
உத்தரவுக்குக் காரணம் சுகாதாரத்தைப் பற்றிய  கவலைமட்டும் அல்ல,
அதைவிட முக்கியமான வேறு காரணங்களும் உண்டு.

     டர்பனில் இருந்த வெள்ளைக்காரர்கள்,    எங்களைத் திருப்பி
அனுப்பிவிட வேண்டும் என்று கிளர்ச்சி செய்து கொண்டிருந்தார்கள்.
அந்த உத்தரவுக்கு இக்கிளர்ச்சி ஒரு காரணம். டர்பனில்