பக்கம் எண் :

சோதனை229

Untitled Document
     கடைசியாக எனக்கும் பிரயாணிகளுக்கும் இறுதி எச்சரிக்கைகள்
வந்து சேர்ந்தன. உயிரோடு             நாங்கள் தப்பிப் போய்விட
வேண்டுமானால், பணிந்துவிடுமாறு       எங்களுக்குக் கூறப்பட்டது.
எங்கள் பதிலில்,பிரயாணிகளும் நானும் நேட்டால்     துறைமுகத்தில்
இறங்குவதற்கு                எங்களுக்கு உள்ள     உரிமையை
வற்புறுத்தினோம்.     என்ன கஷ்டம் நேருவதாயினும்,  நேட்டாலில்
பிரவேசித்தே தீருவது என்று நாங்கள்   கொண்டிருந்த உறுதியையும்
தெரிவித்தோம்.

     இருபத்து         மூன்று நாட்கள் கழித்து, எங்கள் கப்பல்கள்
துறைமுகத்திற்கு வர அனுமதித்தார்கள்.   பிரயாணிகள் இறங்குவதை
அனுமதிக்கும் உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டன.

3. சோதனை

     கப்பல்களைக் கரையோரமாகக்   கொண்டு போய் நிறுத்தினர்;
பிரயாணிகளும்           இறங்க ஆரம்பித்தார்கள்.  அப்பொழுது
ஸ்ரீ எஸ்கோம்பு,காப்டனுக்கு ஒரு சமாசாரம் சொல்லியனுப்பியிருந்தார்:
வெள்ளைக்காரர்கள் என்மீது மிகுந்த கோபத்துடன்   இருக்கிறார்கள்
என்றும், அதனால் என்      உயிர் ஆபத்தில் இருக்கிறது என்றும்,
நானும் என் குடும்பத்தினரும்       இருட்டிய பிறகு கப்பலிலிருந்து
இறங்கும்படி           சொல்லுமாறும்,     அப்பொழுது துறைமுக
சூப்பரிண்டெண்டென்டு ஸ்ரீ டாட்டம், எங்களைப்    பத்திரமாக வீடு
கொண்டு போய்ச் சேர்ப்பார்        என்றும் சொல்லி எச்சரித்தார்.
அப்படியே செய்வதாக    நானும் ஒப்புக்கொண்டேன்.  அரை மணி
நேரம்கூட   ஆகியிராது. ஸ்ரீ லாப்டன், காப்டனிடம் வந்தார். அவர்
சொன்னதாவது:       “ஸ்ரீ காந்திக்கு ஆட்சேபம் இல்லையென்றால்
அவரை           என்னுடன்    அழைத்துப்போக விரும்புகிறேன்.
ஸ்ரீ எஸ்கோம்பு உங்களுக்குச் சொல்லியனுப்பியிருப்பதை நிறைவேற்ற
வேண்டிய      கடமை உங்களுக்கு இல்லை.  கப்பல் ஏஜெண்டான
கம்பெனியின்         சட்ட ஆலோசகன் என்ற முறையில் இதைக்
கூறுகிறேன்”.

     பிறகு அவர் என்னிடம் வந்து பின்வருமாறு கூறினார்: “நீங்கள்
பயப்படவில்லையானால், நான் ஒரு யோசனை கூறுகிறேன்.  ஸ்ரீ மதி
காந்தியும் குழந்தைகளும்   ஸ்ரீ ருஸ்தம்ஜியின் வீட்டிற்கு, வண்டியில்
முன்னால் போகட்டும். அவர்களுக்குப்   பின்னால் நீங்களும் நானும்
நடந்தே போவோம். இரவில் திருடனைப்போல்   நகருக்குள் நீங்கள்
பிரவேசிப்பது எனக்குக்    கொஞ்சமும் பிடிக்கவில்லை. உங்களைத்
துன்புறுத்தி விடுவார்கள் என்று    அஞ்சுவதற்கு இடம் இருப்பதாக
நான் நினைக்கவில்லை.         இப்பொழுது எல்லாம் அமைதியாக
இருக்கிறது.            வெள்ளைக்காரர்கள் எல்லோரும் கலைந்து
போய்விட்டனர். ஆனால், எப்படியும் நீங்கள்      ஒளிந்துகொண்டு
நகருக்குள் வரக்கூடாது என்று மாத்திரம் நான் உறுதியாக