பக்கம் எண் :

24சத்திய சோதனை

Untitled Document

இருந்தது. அதன்    செல்வாக்கு எங்கும்,     எல்லா சமயங்களிலும்
உணரப்பட்டது.     குஜராத்தில்              ஜைனர்களிடத்திலும்,
வைஷ்ணவர்களிடத்திலும் புலால் உணவுக்கு      இருந்த அவ்வளவு
பலமான        எதிர்ப்பையும், அதன்     மீது இருந்த கடுமையான
வெறுப்பையும் போல         இந்தியாவிலோ,    வெளிநாடுகளிலோ
காணமுடியாது. இத்தகைய சூழ்நிலையில்   பிறந்து வளர்ந்தவன் நான்.
அதோடு என் பெற்றோரிடம் எனக்கு மிகுந்த  பக்தியும் உண்டு. நான்
புலால் உண்டேன் என்பதை அறிந்த       கணத்திலேயே அவர்கள்
அதிர்ச்சியினால் செத்து விடுவார்கள்       என்பதையும் அறிவேன்.
மேலும் சத்தியத்தில்          நான் கொண்டிருந்த பற்று,   என்னை
அதிகப்படியான எச்சரிக்கையுடன்  இருக்கும்படியும் செய்தது. மாமிசம்
சாப்பிட ஆரம்பித்து விடுவேனாயின், என் பெற்றோரை நான் ஏமாற்ற
வேண்டியிருக்கும் என்பது          எனக்கு அப்பொழுது தெரியாது
என்று          சொல்லுவதற்கில்லை. ஆனால், என் புத்தியெல்லாம்
சீர்திருத்தத்தில் ஈடுபட்டிருந்தது. ருசிக்கு சாப்பிடுவது என்பதே அதில்
இல்லை. அதற்கு   தனிப்பட்ட  ருசி இருப்பதாக எனக்குத் தெரியாது.
பலசாலியாகவும்          தைரியசாலியாகவும் ஆகவேண்டும் என்று
விரும்பினேன். ஆங்கிலேயரைத்             தோற்கடித்து இந்தியா
சுதந்திரமடையும்படி செய்வதற்கு  என்         நாட்டினரும் அப்படி
ஆகவேண்டும் என்று         ஆசைப் பட்டேன். சுயராஜ்யம் என்ற
சொல்லை அதுவரை நான் கேட்டதில்லை. ஆனால்,       சுதந்திரம்
என்றால் என்ன என்பது எனக்குத் தெரியும். சீர்திருத்தத்தில்  இருந்த
உற்சாகம் என்னைக்        குருடனாக்கி  விட்டது.  ரகசியமாகவே
இருக்கப்போகிறது   என்பது நிச்சயமாகிவிடவே, இக்காரியத்தை என்
பெற்றோருக்குத்     தெரியாதபடி மறைத்துவைப்பது சத்தியத்தினின்று
தவறியதாகாது என்றும் என்னையே  சமாதானப்படுத்திக் கொண்டேன்.

7. ஒரு துக்கமான சம்பவம்
[தொடர்ச்சி]


     முடிவில் அந்த நாள் வந்தது.     அப்பொழுது   நான் இருந்த
நிலையை முழுவதும் விவரிப்பதென்பது கஷ்டம். ஒரு      பக்கத்தில்
சீர்திருத்த ஆர்வம்; வாழ்க்கையில்  முக்கியமான மாறுதலைச் செய்யும்
புதுமை. மறுபக்கத்தில்,       இந்தக் காரியத்தைத் திருடனைப் போல்
ஒளிந்துகொண்டு        செய்ய வேண்டியிருக்கிறதே என்ற வெட்கம்.
இந்த இரண்டில் எது      என்னிடம் மேலோங்கி இருந்தது என்பதை
என்னால் சொல்லமுடியாது.        ஆற்றங்கரையில் தன்னந்தனியான
இடத்தைத் தேடி அங்கே சென்றோம். அங்கே என் வாழ்க்கையிலேயே
முதல் தடவையாக      மாமிசத்தைப் பார்த்தேன்.  கடை ரொட்டியும்
அதோடு இருந்தது. அந்த இரண்டும் எனக்குப் பிடிக்கவில்லை.