பக்கம் எண் :

பிரம்மச்சரியம் - 1 245

Untitled Document
வயதிற்குள்    கற்றுக்கொள்ளாததைப் பின்னால் எந்தக் காலத்திலும்
கற்றுக்கொள்ளுவதே இல்லை.       கருவில் இருக்கும் போதே ஒரு
குழந்தையின் படிப்பு ஆரம்பம் ஆகிவிடுகிறது. கருத்தரிக்கும் போது,
பெற்றோருக்கு இருக்கும் உடல்,      மன நிலைகளே குழந்தைக்கும்
ஏற்பட்டு விடுகின்றன.         கர்ப்பத்தில் இருக்கும் போது தாயின்
மனநிலைகள், ஆசாபாசங்கள், தன்மைகள் ஆகியவைகளால் குழந்தை
பாதிக்கப்படுகிறது. பின்னர், குழந்தை பிறந்ததும்,   பெற்றோர்களைப்
போலவே எதையும் செய்ய அது கற்றுக்கொள்கிறது. அப்புறம், அதிக
காலம்     வரையில்        குழந்தையின் வளர்ச்சி, பெற்றோரைப்
பொறுத்ததாகவே இருக்கிறது.

     இந்த உண்மைகளையெல்லாம்   அறிந்துகொள்ளும் தம்பதிகள்,
தங்களுடைய      காம இச்சையைத்    தீர்த்துக் கொள்ளுவதற்காக
உடற்கலப்பு     வைத்துக்கொள்ளவே மாட்டார்கள். குழந்தைப் பேறு
வேண்டும் என்று          விரும்பும்போது மாத்திரமே கூடுவார்கள்.
உண்பதையும் உறங்குவதையும் போல்    ஆண்-பெண் சேர்க்கையும்
அவசியமான செயல்களில் ஒன்று      என நம்புவது அறியாமையின்
சிகரமே ஆகும் என்று நான் கருதுகிறேன்.  உலகம் நிலைத்திருப்பது,
சந்ததி விருத்திச்          செயலைப் பொறுத்திருக்கிறது. உலகமோ
ஆண்டவனின் திருவிளையாட்டு ஸ்தலம்;   அவனுடைய மகிமையின்
பிரதிபிம்பம். எனவே, இந்த உலகத்தின் ஒழுங்கான வளர்ச்சிக்கு ஏற்ற
வகையிலேயே    சந்ததி விருத்திச் செயல் இருக்க வேண்டும். இதை
உணருகிறவர்கள், எப்பாடுபட்டும் தங்கள்       காம உணர்ச்சியைக்
கட்டுப்படுத்திக்     கொள்ளுவார்கள்; தங்கள் குழந்தைகளின் உடல்
நலனுக்கும் மன நலனுக்கும் ஆன்ம நலனுக்கும் வேண்டிய அறிவைப்
பெற்றுக் கொள்ளுவார்கள்;     பெற்றுக்கொண்ட அறிவின் பயனைச்
சந்ததிகளுக்கு அளிப்பார்கள்.

7 பிரம்மச்சரியம் 1

     இவ் வரலாற்றில், பிரம்மச்சரிய விரதத்தை மேற்கொள்ளுவதைப்
பற்றி நான்     தீவிரமாக நினைக்கத்      தொடங்கிய கட்டத்திற்கு
இப்பொழுது நாம்     வந்திருக்கிறோம். எனக்கு மணமான காலத்தில்
இருந்தே நான் ஏக பத்தினி விரதத்தில் உறுதிகொண்டிருந்தேன். என்
மனைவியிடம்    உண்மையோடு     நடந்துகொள்ளுவது  என்பது,
சத்தியத்தினிடம் நான் கொண்டிருந்த பக்தியின்   ஒரு பகுதியாயிற்று.
ஆனால்,    என் மனைவி    சம்பந்தமாகக்கூட  பிரம்மச்சரியத்தை
அனுசரிக்க      வேண்டியது     முக்கியம்          என்பதைத்
தென்னாப்பிரிக்காவிலேயே    நான்   உணர ஆரம்பித்தேன். இந்த
வழியில் என் எண்ணத்தைத் திருப்பியது எந்தச் சந்தர்ப்பம் அல்லது
நூல்     என்பதை என்னால் திட்டமாகக் கூறமுடியாது. ராய்ச்சந்திர
பாயைக் குறித்து நான் முன்பே    எழுதியிருக்கிறேன். அவருடைய