Untitled Document      அலை பொங்கும்     கடலில்     அங்கும் இங்கும்  அலைப்புண்டு,       அல்லல்பட்டுக் கொண்டிருந்தது. இதனாலேயே அச்சமயம்  வரையில்       நான் வெற்றியடையவில்லை. ஒரு         விரதத்தை  மேற்கொள்ள       மறுப்பதனால் மனிதன் ஆசை வலைக்கு இழுக்கப்பட்டு  விடுகிறான்.       ஒரு விரதத்தினால் கட்டுண்டுவிடுவது, நெறியற்ற வாழ்க்கையிலிருந்து உண்மையான ஏகபத்தினி மண வாழ்வுக்குச் செல்வதைப்  போன்றது என்பதை அறிந்துகொண்டேன்.        ‘முயற்சி செய்வதில் எனக்கு நம்பிக்கை உண்டு. அதனால்    விரதங்களினால் என்னைக்  கட்டுப் படுத்திக்கொள்ள விரும்பவில்லை’ என்பது     பலவீனத்தின் புத்திப் போக்கு எதை விலக்க வேண்டும் என்று இருக்கிறோமோ  அதனிடம் உள்ளுக்குள்          ஆசை இருந்து வருகிறது என்பதையே  இது வெளிப்படுத்துகிறது. இல்லையானால், முடிவான தீர்மானத்திற்கு வந்து விடுவதில் என்ன கஷ்டம் இருக்கமுடியும்? பாம்பு என்னைக்  கடித்து விடும் என்பது     எனக்குத் தெரியும்.  அதனிடமிருந்து ஓடிவிடுவது என்று விரதம் கொள்ளுகிறேன்.     அதனிடமிருந்து ஓடிவிட வெறும் முயற்சி செய்வதோடு நான் இருந்துவிடுவதில்லை. வெறும் முயற்சிதான் என்றால், பாம்பு என்னைக் கட்டாயம் கடித்துவிடும் என்ற நிச்சயமான உண்மையை    அறியாமல்     இருக்கிறேன் என்பதுதான்  பொருள். ஆகையால் வெறும் முயற்சியைக் கொண்டே நான் திருப்தி அடைந்து விடுவது, திட்டமான செயலின்          அவசியத்தை நான் இன்னும் உணர்ந்து கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.
       ‘வருங்காலத்தில்     என் கருத்துக்கள் மாறிவிடுகின்றன என்று வைத்துக் கொள்ளுவோம். அந் நிலைமையில்  என்னை விரதத்தினால் எப்படிக் கட்டுப்படுத்திக் கொள்ளுவது?’       இத்தகைய சந்தேகமே நம்மை    அடிக்கடி தடுத்துவிடுகிறது. குறிப்பிட்ட ஒன்றைத் துறந்தாக வேண்டும் என்பதில் தெளிவான எண்ணம் இன்னும்    ஏற்படவில்லை என்பதையே அந்தச் சந்தேகம் காட்டுகிறது.   இதனாலேயே, ‘ஒன்றில் வெறுப்பு ஏற்படாத துறவு நிலைத்திராது’       என்று நிஷ்குலானந்தர் பாடியிருக்கிறார். எங்கே ஆசை அற்று விடுகிறதோ  அங்கே துறவின் விரதம் இயல்பான, தவிர்க்க முடியாத பலனாக இருக்கும்.
                    தீர விவாதித்து, ஆழ்ந்து சிந்தித்த பிறகே, 1906-ஆம் ஆண்டில் நான் பிரம்மச்சரிய விரதத்தை    மேற்கொண்டேன். இது சம்பந்தமாக எனக்கு இருந்த        எண்ணங்களைக் குறித்து, அதுவரையில் என் மனைவியிடம் நான் எதுவும் கூறவில்லை.    விரதத்தை மேற்கொண்ட சமயத்தில் மாத்திரமே அவளைக் கலந்து ஆலோசித்தேன். அவளுக்கு எவ்வித ஆட்சேபமும் இல்லை. ஆனால்,   முடிவான தீர்மானத்திற்கு வருவதில் எனக்கு அதிகக் கஷ்டம் இருந்தது.    அதற்கு வேண்டிய |      |   
				 | 
				 
			 
			 |