பக்கம் எண் :

254சத்திய சோதனை

Untitled Document
பாடுபட்டு வருவார். எண்ணங்கள் முற்றும்      உறுதி பெற்றாலன்றிப்
பூரணமான பிரம்மச்சரியம் சித்திக்காது. தானாகத் தோன்றும் எண்ணம்,
உள்ளத்தின் ஓர் இச்சையாகும். ஆகையால், எண்ணத்தை அடக்குவது
என்பது        மனத்தை அடக்குவதுதான் என்று ஆகிறது. மனத்தை
அடக்குவதோ,    காற்றை அடக்குவதைவிட       இன்னும் அதிகக்
கஷ்டமானது. என்றாலும், உள்ளத்தினுள்        ஆண்டவன் இருந்து
வருவதால் மனத்தை அடக்குவதும் சாத்தியமாகிறது.  ‘அது கஷ்டமாக
இருப்பதால் அது சாத்தியமானதே அல்ல’  என்று யாரும் எண்ணிவிட
வேண்டாம். அது மிக         உயர்வான லட்சியம். ஆகவே, அதை
அடைவதற்கு மிக அதிகமான    முயற்சி தேவையாவதில் ஆச்சரியம்
எதுவும் இல்லை.

     ஆனால், அத்தகைய             பிரம்மச்சரியத்தை மனிதப்
பிரயத்தனத்தினால் மட்டும் அடைந்துவிடுவது      முடியாத காரியம்
என்பதை நான் இந்தியாவிற்கு வந்த பிறகே    அறியலானேன். ‘அது
வரையில், பழ ஆகாரத்தினால் மாத்திரமே,   எல்லா ஆசைகளையும்
போக்கிக் கொண்டுவிட முடியும்’ என்ற        மயக்கத்தில்  இருந்து
விட்டேன்.  அதற்குமேல் நான் செய்ய வேண்டியது எதுவும் இல்லை
என்ற நம்பிக்கையில்,               எனக்குள் நானே பெருமையும்
பட்டுக் கொண்டேன்.

     என்னுடைய போராட்டங்களைப் பற்றிய அத்தியாயத்தை  நான்
முன் கூட்டி இங்கே விவரித்துவிடக் கூடாது.  இதற்கு மத்தியில் ஒரு
விஷயத்தைத் தெளிவாகக்     கூறிவிடுகிறேன். கடவுளை அடைவது
என்ற                  நோக்கத்துடன்        பிரம்மச்சரியத்தை
மேற்கொள்ளுகிறவர்களுக்குத் தங்களுடைய முயற்சியில்   எவ்வளவு
நம்பிக்கை          இருக்கிறதோ அவ்வளவு நம்பிக்கை கடவுளிடம்
இருக்குமாயின், அவர்கள்       மனச் சோர்வு அடைய வேண்டியது
இல்லை.

     ‘இந்திரியங்களைத்  தடுத்து வைப்பவனுக்கு விஷயானுபவங்கள்
இல்லை; ஆனால்        ஆசை மட்டும் இருக்கும். பரமாத்மாவைத்
தரிசித்த பிறகு அவனுடைய ஆசையும் அழிகிறது.’

     ஆகவே, மோக்ஷத்தை நாடுகிறவனுக்கு     ஆண்டவனுடைய
திருநாமமும், ஆண்டவனுடைய பேரருளுமே   கடைசி ஆதாரங்கள்.
இந்தியாவுக்குத் திரும்பிய பின்னரே       இந்த உண்மை எனக்குப்
புலனாயிற்று.

9 எளிய வாழ்க்கை

     எனது ஆரம்ப வாழ்க்கை        சுகமானதாகவும் சௌகரிய
மானதாகவுமே இருந்தது. ஆனால்,    அந்தப் பரிசோதனை நீடித்து
நிற்கவில்லை.அதிகக் கவனத்துடன் வசதிக்கான       சாமான்களை
எல்லாம் வீட்டில் வாங்கிப் போட்டிருந்தேன்.  என்றாலும், அவற்றில்
எனக்குப் பற்று ஏற்படவில்லை. ஆகவே,      அந்த வாழ்க்கையை