பக்கம் எண் :

274சத்திய சோதனை

Untitled Document
15. காங்கிரஸில்

     கடைசியாகக் காங்கிரஸ் மகாநாடு நடந்தது.    பிரம்மாண்டமான
பந்தலும், தொண்டர்கள்          கம்பீரமாக அணிவகுத்து நின்றதும்,
மேடைமீது தலைவர் வீற்றிருந்ததும்    என்னைப் பிரமிக்கச் செய்தன.
இந்தப் பிரம்மாண்டமான மகாசபையின்     முன்பு நான் எம்மாத்திரம்
என்று எண்ணி வியப்புற்றேன்.

     தலைவரின் பிரசங்கம் ஒரு     தனிப் புத்தகமாகவே இருந்தது.
அதை ஆரம்பம் முதல் கடைசி வரையில் படிப்பது என்பது முடியாத
காரியம். ஆகையால்,        அதிலிருந்து சில  பகுதிகள் மாத்திரமே
படிக்கப்பட்டன. அதன் பிறகு  விஷயாலோசனைக் கமிட்டித் தேர்தல்.
கமிட்டிக் கூட்டங்களுக்குக் கோகலே என்னை  அழைத்துப் போனார்.

     என் தீர்மானத்தை அனுமதிப்பதாக          ஸர் பிரோஸ்ஷா
ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால்  விஷயாலோசனைக் கமிட்டி முன்பு
அதை யார், எப்பொழுது கொண்டு வருவார்கள்    என்று திகைத்துக்
கொண்டிருந்தேன். ஏனெனில், ஒவ்வொரு     தீர்மானத்தின் பேரிலும்
நீண்ட சொற்பொழிவுகள் நடந்தன.        எல்லாம் முழுக்க முழுக்க
ஆங்கிலத்தில்தான்.       ஒவ்வொரு தீர்மானத்தையும் யாராவது ஒரு
பிரபலமான தலைவர் ஆதரித்து வந்தார். முக்கியஸ்தர்களின் பேரிகை
முழக்கத்தின் நடுவே என்     குரல் ஈனக்குரலாக இருந்தது. இரவும்
நெருங்கவே என்    நெஞ்சு படபடத்துக்கொண்டிருந்தது. கடைசியாக
ஆலோசனைக்கு வந்த தீர்மானங்களை,   மின்னல் வேகத்தில் முடிவு
செய்துகொண்டு போனார்கள்    என்றே எனக்கு ஞாபகம். வெளியே
போவதற்கு ஒவ்வொருவரும்       அவசரப்பட்டுக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது இரவு 11 மணி. எழுந்து பேச எனக்குத் துணிவு இல்லை.
முன்னாலேயே கோகலேயைப் பார்த்தேன்.  என் தீர்மானத்தை அவர்
பார்த்தும் இருக்கிறார்.    அவர் உட்கார்ந்திருந்த இடத்திற்கு அருகே
போய்,        “தயவு செய்து எனக்கு ஏதாவது செய்யுங்கள்” என்று
குசுகுசுவென்று சொன்னேன்.           “உங்கள் தீர்மானத்தை நான்
மறந்துவிடவில்லை.           தீர்மானங்களை எவ்வளவு வேகத்தில்
அடித்துக்கொண்டு    போகிறார்கள் என்பதைப் பாருங்கள். ஆனால்,
அவர்கள் உங்கள்             தீர்மானத்தை விட்டுவிட்டு, அப்பால்
போய்விடாமல்  நான் பார்த்துக் கொள்ளுகிறேன்” என்றார், கோகலே.

     “ஆகவே, எல்லாவற்றையும்        முடித்துவிட்டோமல்லவா?”
என்றார், ஸர் பிரோஸ்ஷா மேத்தா.

     “இல்லை, இல்லை,        தென்னாப்பிரிக்கா பற்றிய தீர்மானம்
பாக்கியாகஇருக்கிறது.                 ஸ்ரீ காந்தி நீண்ட நேரமாகக்
காத்துகொண்டிருக்கிறார்“ என்று        உரக்கக் கூறினார், கோகலே.