பக்கம் எண் :

பிறப்பும் தாய் தந்தையரும்3

Untitled Document

மிகுந்த மதப்பற்றுக் கொண்டவர். தாம் செய்ய வேண்டிய    அன்றாட
பூஜையை முடிக்காமல் அவர் சாப்பிட மாட்டார். அவருடைய நித்தியக்
கடமைகளில் ஒன்று, விஷ்ணு கோயிலுக்குப் போய்த்   தரிசித்துவிட்டு
வருவது.ஒரு தடவையேனும் சாதூர் மாச விரதத்தை அனுசரிக்க அவர்
தவறியதாக எனக்கு        ஞாபகம் இல்லை.அவர்     கடுமையான
விரதங்களையெல்லாம் மேற்கொள்ளுவார். அவற்றை   நிறைவேற்றியும்
தீருவார். நோயுற்றாலும்       விரதத்தை மாத்திரம் விட்டுவிடமாட்டார்.
சாந்திராயண விரதமிருந்த      போது அவர் நோயுற்றிருந்தது எனக்கு
நினைவிருக்கிறது. ஆனால்,   விரதத்தை விடாமல் அவர் அனுஷ்டித்து
முடித்தார். தொடர்ந்து           இரண்டு மூன்று உபவாச விரதங்கள்
இருப்பதென்பதும் அவருக்குப் பிரமாதம்  அல்ல. சாதுர்மாச காலத்தில்
ஒரு வேளை ஆகாரத்தோடு இருப்பது     அவருக்குப் பழக்கம்.அது
போதாதென்று ஒரு    சாதுர்மாசத்தின்போது   ஒன்றுவிட்டு ஒரு நாள்
உபவாசம் இருந்து     வந்தார். மற்றொரு சாதுர்மாச விரதத்தின்போது
சூரியதரிசனம் செய்யாமல்          சாப்பிடுவதில்லை என்று விரதம்
கொண்டிருந்தார். அந்த         நாட்களில் குழந்தைகளாகிய நாங்கள்
வெளியில் போய் நின்றுகொண்டு,     சூரியன் தெரிந்ததும் தாயாரிடம்
போய்ச் சொல்லுவதற்காக   ஆகாயத்தைப் பார்த்தபடியே இருப்போம்.
கடுமையான மழைக்காலத்தில் அடிக்கடி சூரியபகவான் தரிசனமளிக்கக்
கருணை கொள்ளுவதில்லை என்பது எல்லோருக்கும்  தெரிந்ததே.சில
நாட்களில்     திடீரென்று சூரியன் தோன்றுவான்; தாயாருக்கு இதைத்
தெரிவிப்பதற்காக ஓடுவோம். தாமே தரிசிப்பதற்காக  அவர் வெளியே
ஓடி வந்து பார்ப்பார். ஆனால் சூரியன் அதற்குள்  மறைந்து, அன்று
அவர் சாப்பிட முடியாதபடி      செய்துவிடுவான்.   “அதைப்பற்றிப்
பரவாயில்லை” என்று  மகிழ்ச்சியோடு தான் தாயார் கூறுவார். “நான்
இன்று சாப்பிடுவதை    பகவான் விரும்பவில்லை” என்பார். பின்னர்
வீட்டுக்குள் போய்த் தம் அலுவல்களைக் கவனித்துக்கொண்டிருப்பார்.

     என் தாயாருக்கு        அனுபவ ஞானம்   அதிகமாக உண்டு.
சமஸ்தானத்தைப் பற்றிய விவகாரங்களெல்லாம்   அவருக்கு நன்றாகத்
தெரியும். அவருடைய     புத்திக் கூர்மைக்காக   ராஜ குடும்பத்தைச்
சேர்ந்த பெண்கள் அவரிடம் அதிக மதிப்பு  வைத்திருந்தார்கள். நான்
குழந்தை என்ற    சலுகையை வைத்துக் கொண்டு    அடிக்கடி என்
தாயாருடன்    அரண்மனைக்குப் போயிருக்கிறேன். தாகூர் சாஹிபின்
விதந்துவான   தாயாருடன்   என்    தாயார்       உற்சாகத்தோடு
விவாதித்ததெல்லாம் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.

     இந்தப்   பெற்றோருக்குச்   சுதாமாபுரி     என்று  கூறப்படும்
போர்பந்தரில் 1869, அக்டோபர் 2-ஆம் தேதி நான் பிறந்தேன்.