பக்கம் எண் :

அவமதிப்புக்கு உட்பட்டேன்309

Untitled Document
என்று பதில் கூறினேன்.

     “இங்கே வர உமக்கு     உரிமை கிடையாது என்பது உமக்குத்
தெரியாதா? நீர் வைத்திருக்கும் அனுமதிச் சீட்டு,    தவறாக உமக்குக்
கொடுக்கப்பட்டுவிட்டது. இங்கு குடியேறிய இந்தியராக உம்மைக் கருத
முடியாது. நீர் திரும்பிப் போய் விட வேண்டும்.  ஸ்ரீ சேம்பர்லேனிடம்
நீர் தூது போகக்கூடாது. முக்கியமாக, இங்கிருக்கும்       இந்தியரின்
பாதுகாப்புக்கென்றே        ஆசியாக்காரர்களின்          இலாகா
ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. சரி நீர் போகலாம்”   என்று கூறித் துரை
எங்களை அனுப்பி விட்டார். பதில்     சொல்லுவதற்குச் சந்தர்ப்பமே
அளிக்கவில்லை.

     ஆனால், என்னுடன் வந்தவர்களை மாத்திரம்   அங்கே காக்க
வைத்தார். அவர்களைக் கண்டபடி திட்டி, என்னை அனுப்பி விடுமாறு
அவர்களுக்கு யோசனை கூறி     அனுப்பினார். அதிக எரிச்சலுடன்
அவர்கள் திரும்பிவந்தார்கள். இவ்விதம் நாங்கள்   எதிர்பாராத புதிய
நிலைமை ஒன்று எங்கள் முன் குறுக்கிட்டது.

3 அவமதிப்புக்கு உட்பட்டேன்

     அந்த அவமரியாதை     என் மனத்தை அதிகமாக வருத்தியது.
ஆனால், இதற்கு முன்னால்  இத்தகைய அவமரியாதைகள் பலவற்றை
சகித்திருக்கிறேனாகையால், அவைகளால் நான்    பாதிக்கப்படாதவன்
ஆகிவிட்டேன். எனவே,     இப்பொழுது கடைசியாக ஏற்பட்ட இந்த
அவமதிப்பையும்      மறந்து விடுவதெனத்         தீர்மானித்தேன்.
இவ்விஷயத்தில்        விருப்பு வெறுப்பின்றிக் கவனித்து, எந்த வழி
சரியெனத் தோன்றுகிறதோ         அதன்படி நடப்பதென்றும் முடிவு
செய்தேன்.

     ஆசியாக்காரர்கள் இலாகாவின்    பிரதம அதிகாரிகளிடமிருந்து
எங்களுக்கு ஒரு கடிதம் வந்தது. ஸ்ரீ சேம்பர்லேனை நானே டர்பனில்
கண்டிருக்கிறேனாகையால்,         அவரைச் சந்திக்கப்போகும் தூது
கோஷ்டியிலிருந்து             என் பெயரை நீக்கிவிட வேண்டியது
அவசியமாகிறது என்று அக்கடிதம் கூறியது.      அக்கடிதத்தை என்
சகாக்களினால்  சகித்துக்கொள்ள முடியவில்லை. தூது போவது என்ற
யோசனையையே     அடியோடு கைவிட்டு விடுவது என்று அவர்கள்
அபிப்பிராயப்பட்டார்கள். அதனால், சமூகத்திற்கு       ஏற்படக்கூடிய
சங்கடமான நிலைமையை அவர்களுக்கு எடுத்துக் கூறினேன்.

     “ஸ்ரீ சேம்பர்லேனிடம் நீங்கள்    உங்கள் குறைகளை எடுத்துக்
கூறாதுபோனால்,           உங்களுக்குக் குறைகளே இல்லை என்று
கருதப்பட்டுவிடும். எப்படியும்      நாம் சொல்லப் போவதை எழுத்து
மூலமே சொல்லப்போகிறோம். அதையும்    நாம் தயாரித்திருக்கிறோம்.
அதை அவர் முன்பு நான் படிக்கிறேனா,   வேறு ஒருவர் படிக்கிறாரா