பக்கம் எண் :

மண்,நீர்சிகிச்சை 321

Untitled Document
என்னை எச்சரிக்கும் சுடரொளிபோல ஆயிற்று.

     சைவ உணவுக் கொள்கை என்ற   பீடத்தில் இட்ட இந்தப் பலி
மனமாரச் செய்ததும் அன்று;           எதிர்பார்த்தும் அல்ல; வேறு
வழியில்லாமல் நடந்துவிட்டதே அது.

7 மண்,நீர்சிகிச்சை

     என் வாழ்க்கை முறையை நான்  எளிதாக்கிக்கொண்டு வர வர,
மருந்துகளின்மீது              எனக்கு நாளாவட்டத்தில் வெறுப்பும்
அதிகரித்துக்கொண்டு வந்தது. டர்பனில்       நான் வக்கீல் தொழில்
நடத்தி வந்தபோது,            பலவீனத்தினாலும் வாத சம்பந்தமான
எரிச்சலினாலும் சிறிது      காலம் பீடிக்கப்பட்டிருந்தேன். என்னைப்
பார்க்க வந்திருந்த       டாக்டர் பி.ஜே. மேத்தா எனக்குச் சிகிச்சை
செய்தார். நானும் குணமடைந்தேன்.             அதன் பிறகு நான்
இந்தியாவுக்குத் திரும்பிய காலம் வரையில்,  குறிப்பிடக்கூடிய வியாதி
எதனாலும் நான் பீடிக்கப்பட்டிருந்ததாக    எனக்கு ஞாபகம் இல்லை.

     ஆனால், ஜோகன்னஸ்பர்க்கில்    இருந்தபோது மலச்சிக்கலும்,
அடிக்கடி தலைவலி உபத்திரமும்   இருந்து வந்தன. எப்பொழுதாவது
பேதி மருந்து சாப்பிட்டும்,  சாப்பாட்டை ஒழுங்குபடுத்திக் கொண்டும்
என் தேக நிலை கெடாமல் பார்த்து வந்தேன். ஆனால்,  நான் நல்ல
தேக சுகத்துடன் இருந்தேன் என்று சொல்லமுடியாது.

     இந்தப் பேதி     மருந்துகளின் பிடியிலிருந்து எப்பொழுதுதான்
விடுபடுவோமோ? என்று எப்பொழுதும்  ஆச்சரியப்பட்டுக் கொண்டும்
இருப்பேன்.

     அந்தச் சமயத்தில் மான்செஸ்டரில்,    ‘காலை ஆகார மறுப்புச்
சங்கம்’ என     ஒன்று        ஆரம்பமாகியிருப்பதாகப் படித்தேன்.
இச்சங்கத்தை ஆரம்பித்தவர்களின் வாதம் இதுதான்: ஆங்கிலேயர்கள்
அடிக்கடியும் அதிகமாகவும் சாப்பிடுகிறார்கள்;      நடுநிசி வரையில்
அவர்கள் சாப்பிடுகின்றனர். ஆகையால்,         வைத்தியச் செலவு
அதிகமாகிறது;     இந்த நிலைமை சீர்படவேண்டும் என்று அவர்கள்
விரும்பினால், காலை ஆகாரத்தையாவது அவர்கள் கைவிடவேண்டும்.
இந்த விஷயங்களையெல்லாம் என்      விஷயத்திலும் சொல்லி விட
முடியாதென்றாலும், ஓரளவுக்கு        இந்த வாதம் என் அளவிலும்
பொருந்துவதாகிறது என்று எண்ணினேன்.         மாலையில் தேநீர்
குடிப்பதோடு  தினம் மூன்று வேளை நன்றாகச் சாப்பிட்டும் வந்தேன்.
நான் குறைவாகச் சாப்பிடுகிறவன் அல்ல.        சைவ உணவாகவும்
மசாலை சேராததாகவும் இருந்தால், எத்தனை   வகைப் பதார்த்தங்கள்
இருந்தாலும் நன்றாகச் சாப்பிடுவேன். காலையில் ஆறு,  ஏழு மணிக்கு
முன்னால் எழுந்திருப்பதில்லை. ஆகையால், நானும்  காலை ஆகாரம்