பக்கம் எண் :

ஐரோப்பியரின் தொடர்பு. (தொடர்சி) 337

Untitled Document
வீடுகளில் தங்கியிருக்கிறேன்.    அங்கே அவர்களுடைய வாழ்க்கை
முறையை நானும் அனுசரித்து வந்தேன்.    ஏறக்குறையச் சாப்பாட்டு
விடுதியில் தங்குவதைப்     போன்றதே அது. இங்கோ அது முற்றும்
மாறானது.              ஆங்கில நண்பர்கள்  என் குடும்பத்தைச்
சேர்ந்தவர்களாயினர். பல விஷயங்களில்      அவர்கள் இந்தியரின்
முறைகளை மேற்கொண்டனர்.        நடைமுறை போன்றவைகளில்
மேனாட்டு முறையே அனுசரிக்கப்பட்டாலும் உள் வாழ்க்கை  முற்றும்
இந்திய மயமானதாகவே இருந்தது. குடும்பத்துடன்  சேர்ந்தவர்களாக
அவர்களை வைத்துக் கொண்டிருப்பதால் சில கஷ்டங்கள் இருந்தன
என்பது எனக்கு நினைவு இருக்கிறது. என்றாலும்,     என் வீட்டில்
தங்கள் சொந்த        வீடு போன்றே அவர்கள் இருந்து வருவதில்
அவர்களுக்கு எந்தவிதமான    கஷ்டமுமே இல்லை என்பதை நான்
நிச்சயமாகக் கூற முடியும்.               டர்பனில் இருந்ததைவிட
ஜோகன்னஸ்பர்க்கில் இவ்விதமான          தொடர்புகள் இன்னும்
அதிகமாயின.

12 ஐரோப்பியரின் தொடர்பு. (தொடர்ச்சி)

     ஜோகன்னஸ்பர்க்கில் ஒரு சமயம் என்னிடம் நான்கு இந்தியக்
குமாஸ்தாக்கள் இருந்தனர். குமாஸ்தாக்கள் என்பதைவிட  அவர்கள்
என் புத்திரர்கள் போலவே  இருந்தனர் எனலாம். ஆனால், எனக்கு
இருந்த வேலைக்கு இவர்கள் போதவில்லை.     டைப் அடிக்காமல்
எதுவும் செய்ய இயலாது எங்களில்   யாருக்காவது டைப் அடிக்கத்
தெரியுமென்றால் அது எனக்குத்தான். குமாஸ்தாக்களில்  இருவருக்கு
அதைச் சொல்லிக்கொடுத்தேன். ஆனால், அவர்களுக்கு  ஆங்கிலம்
நன்றாகத் தெரியாததனால்       அவர்கள் அதில் போதிய திறமை
பெறவில்லை. அவர்களுள் ஒருவரை நல்ல    கணக்கராகப் பயிற்சி
செய்துவிடவும் விரும்பினேன்.         அனுமதிச் சீட்டுப் பெறாமல்
டிரான்ஸ்வாலுக்குள் யாரும் வர முடியாதாகையால், நேட்டாலிலிருந்து
நான் எவரையும் கொண்டு வருவதற்கும் முடியவில்லை. என்னுடைய
சொந்தச் சௌகரியத்திற்காக அனுமதிச் சீட்டு அதிகாரியின் தயவை
நாடுவதற்கு நான் விரும்பவுமில்லை.

     என்ன செய்வதென்றே      எனக்குப் புரியவில்லை. வேலை
பாக்கியாகிக், குவிந்துகொண்டே      போயிற்று. ஆகையால், நான்
என்னதான் முயன்றாலும், தொழில்    சம்பந்தமான வேலைகளுடன்
பொது வேலையையும் செய்து       சமாளித்துக்கொண்டு விடுவது
அசாத்தியம் என்று எனக்குத் தோன்றியது.       ஓர் ஐரோப்பியக்
குமாஸ்தாவை     வைத்துக்கொள்ள நான் தயாராகவே இருந்தேன்.
ஆனால், என்னைப்போன்ற      ஒரு கறுப்பு மனிதனிடம் வேலை
செய்ய ஒரு வெள்ளைக்கார     ஆணோ, பெண்ணோ வருவார்கள்