பக்கம் எண் :

கறுப்பு பிளேக் -1 347

Untitled Document
கபடமில்லாதவர்கள்; தாராள குணம் உள்ளவர்கள்; உயர்ந்த ஒழுக்கம்
உள்ளவர்கள். இவர்களுடைய தலைவர்கள்   சங்கத் தலைவரான ஸ்ரீ
ஜெயராம் சிங்கும்,        சங்கத் தலைவரைப் போன்றே இருந்த ஸ்ரீ
பத்ரியும் ஆவார். அவர்கள் இருவரும்        இப்பொழுது காலமாகி
விட்டனர். அவர்கள்           எனக்குப் பெரும் அளவு உதவியாக
இருந்தார்கள். ஸ்ரீ பத்ரி என்னுடன்         நெருங்கிப் பழகியதோடு
சத்தியாக்கிரகத்திலும்       முக்கியமான பங்கு எடுத்துக்கொண்டார்.
அவர்களையும் மற்ற நண்பர்களையும் கொண்டு,    வடக்கிலிருந்தும்
தென்னிந்தியாவிலிருந்தும்          வந்து குடியேறி இருந்த அநேக
இந்தியருடன் எனக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. வெறும் சட்ட
ஆலோசகர் என்பதைவிட அவர்களுக்கு     நான் சகோதரனாகவே
ஆகிவிட்டேன். மறைவாகவும்,           பகிரங்கமாகவும் அவர்கள்
அனுபவித்த துக்கங்களிலும்          கஷ்டங்களிலும் நானும் பங்கு
கொண்டேன்.

     அங்கே இந்தியர் என்னை எப்படி     அழைத்து வந்தார்கள்
என்பதை அறிவது கொஞ்சம்    ருசிகரமானதாகவே இருக்கக்கூடும்.
காந்தி என்று என்னைக் கூட்பிட  அப்துல்லா சேத் மறுத்துவிட்டார்.
அதிர்ஷ்டவசமாக யாரும்        என்னை ‘சாஹேப்’ (துரை) என்று
கருதவோ, அப்படி அழைத்து    என்னை அவமதிக்கவோ இல்லை.
அப்துல்லா சேத் சிறந்த சொல்    ஒன்றைக் கண்டுபிடித்தார். ‘பாய்’,
அதாவது சகோதரர் என்பது தான்        அச்சொல். மற்றவர்களும்
அதையே பின்பற்றி, நான்   தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்துவிடும்
வரையில் என்னை ‘பாய்’ என்றே கூப்பிட்டு வந்தார்கள்.  முன்னால்
ஒப்பந்தத் தொழிலாளராக இருந்த இந்தியர்   இப்பெயரால் என்னை
அழைத்தபோது அதில்       இனிமையானதொரு மணம் கமழ்ந்தது.

15 கறுப்பு பிளேக் -1

     இந்தியர் குடியிருந்த ஒதுக்கல் இடங்களை நகரசபை வாங்கிக்
கொண்டதுமே அவ்விடத்திலிருந்து         இந்தியர் அகற்றப்பட்டு
விடவில்லை. அவர்களை        அப்புறப்படுத்துவதற்கு முன்னால்
அவர்களுக்கு ஏற்றதான  புது இடங்களைத் தேட வேண்டியிருந்தது.
நகரசபை இதைச் சுலபத்தில் செய்து விட முடியாமல் இருந்ததனால்,
அந்த ஆபாசப் பகுதியிலேயே    இந்தியர்கள் இருந்து கஷ்டப்பட
வேண்டியதாயிற்று. முன்னால் இருந்ததைவிட   அவர்கள் நிலைமை
இப்போது மிகவும் மோசமானதாக இருந்தது     என்பதுதான் இதில்
வித்தியாசம். சொந்தக்காரர்கள் என்று இல்லாது    போய்விட்டதால்
அவர்கள் நகரசபையின் இடத்தில் வாடகைக்கு இருப்பவர்களாயினர்.
இதன் பலனாக அவர்களுடைய சுற்றுப்புறங்களெல்லாம்   முன்னால்
இருந்ததைவிட அதிக ஆபாசமாயின.         அவர்களே சொந்தக்