பக்கம் எண் :

372சத்திய சோதனை

Untitled Document
23 குடும்பக் காட்சி

     வீட்டுச் செலவு அதிகமாக இருந்தபோதிலும்  எளிய வாழ்க்கை
நடத்தவேண்டும் என்ற       மனப்போக்கு டர்பனிலேயே ஆரம்பம்
ஆகிவிட்டது என்பதை முன்பே கவனித்து   இருக்கிறோம். ஆனால்,
ரஸ்கினின் உபதேசங்களை     அனுசரித்து ஜோகன்னஸ்பர்க் வீடே
கடுமையான மாறுதலை அடைந்தது.

     ஒரு பாரிஸ்டரின் வீட்டில் எவ்வளவு எளிமையைப் புகுத்துவது
சாத்தியமோ  அவ்வளவையும் செய்தேன்.       ஓரளவுக்கு மேஜை
நாற்காலிகள்      இல்லாமல் இருக்க முடியாது.   புறத்தில் ஏற்பட்ட
மாறுதலைவிட அகத்தில் ஏற்பட்ட   மாறுதலே அதிகம். உடலுழைப்பு
வேலைகளையெல்லாம் நாமே      செய்துகொள்ள வேண்டும் என்ற
ஆவல் வளர்ந்தது.         ஆகையால், என் குழந்தைகளையும்கூட
இவ்விதமான கட்டுத் திட்டங்களின் கீழ்    வளர்க்க ஆரம்பித்தேன்.

     கடையில் ரொட்டி வாங்குவதை     நிறுத்தினோம். கூனேயின்
முறைப்படி தவிடு போக்காத  கோதுமையைக்கொண்டு  வீட்டிலேயே
ரொட்டி தயாரிக்க ஆரம்பித்தோம்.  இதற்குக் கடையில் விற்கும் மில்
மாவு பயனில்லை. கையினாலேயே  அரைத்த மாவை உபயோகிப்பது
அதிக எளிமை ஆவதோடு             உடம்புக்கும் நல்லதாகவும்
சிக்கனமாகவும் இருக்கும்           என்று எண்ணினோம். எனவே
கையினால் மாவு அரைக்கும்        இயந்திரம் ஒன்றை ஏழு பவுன்
கொடுத்து வாங்கினேன். அதன்      இரும்புச் சக்கரத்தை ஒருவரே
சுற்றுவது கஷ்டம். இரண்டு பேர்             சுலபத்தில் சுற்றலாம்.
வழக்கமாகப் போலக்கும்            நானும் குழந்தைகளும் அந்த
இயந்திரத்தில் மாவு அரைப்போம்.       நாங்கள் மாவு அரைக்கும்
நேரந்தான்         சாதாரணமாக    என் மனைவி அடுப்பங்கரை
வேலையைப்          பார்க்கப் போகும் நேரம். என்றாலும், மாவு
அரைப்பதில் அவ்வப்போது அவளும்    எங்களுக்கு உதவி செய்ய
வருவாள். ஸ்ரீமதி போலக் வந்து சேர்ந்த பிறகு அவரும் எங்களுடன்
சேர்ந்துகொள்ளுவார். மாவு அரைப்பது    குழந்தைகளுக்கு நன்மை
தரும் தேகப் பயிற்சியாக இருந்தது.    இந்த வேலையையோ, வேறு
எந்த வேலையையோ       செய்ய வேண்டும் என்று குழந்தைகள்
கட்டாயப்படுத்தப் படுவதில்லை. தாங்களே வந்து, இதில் எங்களுக்கு
உதவி செய்வது குழந்தைகளுக்கு    ஒரு விளையாட்டு. களைத்துப்
போனால் அவர்கள் போய்விடலாம்.      குழந்தைகள் - பின்னால்
உங்களுக்கு நான் அறிமுகம்       செய்துவைக்கப்  போகிறவர்கள்
உள்பட - எனக்கு உதவி      செய்ய வராமல் இருந்ததே இல்லை.
இவ் வேலையில் பின்     தங்கியவர்களும் சிலர் உண்டு. ஆனால்,
அநேகர் உற்சாகமாகவே         வேலை செய்தனர். அந்த நாளில்
இளைஞர்கள், வேலை செய்யத்