பக்கம் எண் :

384சத்திய சோதனை

Untitled Document
27 மேலும் உணவுப் பரிசோதனைகள்

     மனம், வாக்கு, செயல் ஆகிய    மூன்றிலும் பிரம்மச்சரியத்தை
அனுசரிக்க வேண்டும் என்பதில்      நான் ஆர்வத்துடனிருந்தேன்.
அதேபோல் சத்தியாக்கிரகப்   போராட்டத்திற்கே அதிக அளவு என்
காலத்தைச் செலவிடவும்,   தூய்மையை வளர்த்துக்கொண்டு அதற்கு
என்னைத்             தகுதியுடையவனாக்கிக்கொள்ளவும் ஆர்வம்
கொண்டிருந்தேன். ஆகையால், என் உணவு சம்பந்தமாக மேலும் பல
மாறுதல்களைச் செய்துகொண்டு,           எனக்கு நானே அதிகக்
கட்டுப்பாடுகளையும் விதித்துக்கொள்ள வேண்டியதாயிற்று. முன்னால்
செய்த மாறுதல்களெல்லாம் பெரும்பாலும்       தேகாரோக்கியத்தை
முன்னிட்டுச் செய்தவை. ஆனால்,      புதிய சோதனைகளோ, சமய
நோக்கில் செய்தவை.

     உண்ணாவிரதமும், ஆகாரக் கட்டுப்பாடும் என்  வாழ்க்கையில்
இப்பொழுது           முக்கியமானவைகளாயின. நாவின் சுவையில்
அவாவுடையவனிடமே பெரும்பாலும்  காமக்குரோதங்கள் இயல்பாகக்
குடிகொள்ளும் என் விஷயத்திலும்       அவ்வாறே இருந்தது. காம
இச்சையையும் நாவின் ருசியையும்        அடக்க முயன்றதில் நான்
எத்தனயோ  கஷ்டங்களை         அனுபவிக்க வேண்டி இருந்தது.
அவைகளை        முற்றும் அடக்கிவிட்டேன் என்று நான் இன்னும்
சொல்லிக்கொள்வதற்கில்லை. என்னைப் பெருந்தீனிக்காரனாகக் கருதி
வந்தேன். எனது           கட்டுத்திட்டம் என்று நண்பர்கள் எதை
நினைத்தார்களோ          அது கட்டுத்திட்டமாக எனக்கு என்றும்
தோன்றவில்லை.   நான்       இன்று கொண்டிருக்கும் அளவுக்குக்
கட்டுத்திட்டங்களை      வளர்த்துக்கொள்ளத் தவறியிருப்பேனாயின்,
மிருகங்களிலும்              இழிந்த நிலைக்கு நான் தாழ்ந்துபோய்
வெகுகாலத்திற்கு முன்பே      நாசமடைந்து இருப்பேன். என்றாலும்,
என்னுடைய            குறைபாடுகளைப் போதிய அளவுக்கு நான்
அறிந்திருந்ததால், அவைகளைப்    போக்கிக் கொண்டுவிடப் பெரும்
முயற்சிகளை நான் செய்தேன்.        இந்த முயற்சிகளின் பலனாக
இவ்வளவு காலமும் இவ்வுடலுடன் காலந்தள்ளிவருவதோடு  அதைக்
கொண்டு        என்னால் இயன்ற பணியையும் செய்து வருகிறேன்.

     என் குறைகளை நான் அறிந்திருந்ததோடு மனத்துக்கு இசைந்த
சகாக்களின் தொடர்பும்    எதிர்பாராத விதமாக ஏற்பட்டது. ஏகாதசி
தினத்தன்று பழங்கள்      மாத்திரமே சாப்பிடுவது அல்லது பட்டினி
விரதம் இருப்பது என்று ஆரம்பித்தேன். ஜன்மாஷ்டமி முதலிய விரத
தினங்களையும் அனுஷ்டிக்கத் தொடங்கினேன்.

     முதலில் பழ ஆகாரத்துடன் ஆரம்பித்தேன்.  ஆனால், நாவின்
சுவையடக்கத்தைப் பொறுத்த வரையில்  பழ ஆகாரத்திற்கும் தானிய
ஆகாரத்திற்கும் எந்த விதமான வித்தியாசமும் எனக்குத்