பக்கம் எண் :

386சத்திய சோதனை

Untitled Document
கவனம் செலுத்துவது தவறு       என்பதை   அனுபவம் எனக்குப்
போதித்தது. நாவின் சுவையைத் திருப்தி   செய்வதற்காகச் சாப்பிடக்
கூடாது; உடலை வைத்திருப்பதற்கு      என்று மாத்திரமே  சாப்பிட
வேண்டும். உணர்ச்சி தரும் ஒவ்வோர் உறுப்பும் உடலுக்கும், உடலின்
மூலம் ஆன்மாவுக்கும் ஊழியம் செய்யும்போது     அதனதன் இன்ப
நுகர்ச்சி மறைந்து போகிறது.       அப்பொழுது தான் அதற்கென்று
இயற்கை வகுத்திருக்கும் கடமையை    அது செய்ய ஆரம்பிக்கிறது.

     இயற்கையோடு இசைந்த       இந்த நிலையை அடைவதற்கு
எத்தனைதான் பரிசோதனைகள் நடத்தினாலும்   போதுமானவையாக
மாட்டா; எந்தத் தியாகமும்         இதற்கு அதிகமாகாது. ஆனால்,
துரதிருஷ்டவசமான இக்காலத்தின் போக்கோ இதற்கு எதிரிடையான
திக்கில் பலமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.       அழியும் உடலை
அலங்கரிப்பதற்காகவும்,  மிகச் சொற்ப காலம் அது நீடித்திருப்பதற்கு
முயலுவதற்கும், ஏராளமான        மற்ற உயிர்களைப் பலியிட நாம்
வெட்கப்படுவதில்லை.       இதன் பலனாக நம்மையே உடலோடும்,
ஆன்மாவோடும்        மாய்த்துக் கொள்ளுகிறோம். பழைய நோய்
ஒன்றைப் போக்கிக் கொள்ள முயன்று,     நூற்றுக்கணக்கான புதிய
நோய்களுக்கு இடந்தருகிறோம்.    புலன் இன்பங்களை அனுபவிக்க
முயன்று முடிவில்        இன்பானுபவத்திற்கான நமது சக்தியையும்
இழந்துவிடுகிறோம். இவை யாவும்நம் கண் முன்னாலேயே    நடந்து
கொண்டிருக்கின்றன. ஆனால்,             இவற்றைப் பார்க்காமல்
இருப்பவர்களைப் போன்ற குருடர்கள்      வேறு யாருமே இல்லை.
உணவுச் சோதனைகளின் நோக்கத்தையும்,  அவற்றிற்குக் காரணமாக
இருந்த கருத்துக் கோவையையும் இதுவரை    எடுத்துக்காட்டினேன்.
இனி உணவுச் சோதனைகளைக் குறித்துக்   கொஞ்சம் விவரமாகவே
கூற நினைக்கிறேன்.

28 கஸ்தூரிபாயின் தீரம்

     என் மனைவி தனது வாழ்க்கையில்    மும்முறை கடுமையான
நோய்வாய்ப்பட்டு மரணத்திலிருந்து     தப்பிப் பிழைத்தாள். குடும்ப
வைத்திய            முறைகளினாலேயே அவள் குணமடைந்தாள்.
சத்தியாக்கிரகம் நடந்து கொண்டிருந்த   போதோ அல்லது ஆரம்பம்
ஆவதற்கிருந்த சமயத்திலோ      அவள் முதல் முறை கடுமையாக
நோயுற்றாள். அவளுக்கு அடிக்கடி   ரத்த நஷ்டம் ஏற்பட்டு வந்தது.
ரண சிகிச்சை செய்வது அவசியம் என்று    ஒரு வைத்திய நண்பர்
ஆலோசனை கூறினார். முதலில்    கொஞ்சம் தயங்கினாள் எனினும்
பிறகு சம்மதித்தாள். அவள் அதிகப் பலவீனமாக இருந்ததால் மயக்க
மருந்து கொடுக்காமல் டாக்டர் ரண சிகிச்சை