பக்கம் எண் :

422சத்திய சோதனை

Untitled Document
போது, என்ன           நேருவதாயினும் பொருட்படுத்தாது, அதை
ஒப்புக்கொண்டு அதற்குப் பரிகாரம் தேட வேண்டும்.

40 குட்டிச் சத்தியாக்கிரகம்

     இவ்விதம் கடமை என்று  கருதியதனால் போரில் நான் கலந்து
கொண்டேன். ஆயினும், அதில்    நான் நேரடியாக ஈடுபடமுடியாது
போயிற்று. அத்தோடு அந்த    நெருக்கடியான நிலைமையிலும் கூட
ஒரு குட்டிச் சத்தியாக்கிரகம் என்று        சொல்லக் கூடியதையும்
செய்யவேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது.

     எங்கள் பெயர்கள்       அங்கீகரிக்கப்பட்டுப் பதிவானவுடன்
எங்களுக்குப் பயிற்சியளிப்பதைக் கவனிப்பதற்காக ஓர்  அதிகாரியும்
நியமிக்கப்பட்டார் என்று     நான் முன்பே கூறியிருக்கிறேன். இந்த
அதிகாரி, பயிற்சி சம்பந்தமான விஷயங்களில் மட்டுமே எங்களுக்குத்
தலைவர் என்றும், மற்ற விஷயங்களிலெல்லாம்  அப்படைக்கு நானே
தலைவன் என்றும் அதனுடைய        உள் கட்டுத் திட்டங்களைப்
பொறுத்தவரை எனக்கே நேரடியான      பொறுப்பு உண்டு என்றும்
நாங்கள் எல்லோரும்  எண்ணியிருந்தோம். அதாவது, அந்த அதிகாரி
இப்படை விஷயத்தில் என் மூலமே     எதையும் செய்ய வேண்டும்
என்று கருதினோம். ஆனால், இந்தப்     பிரமை இருந்து வர அந்த
அதிகாரி ஆரம்பத்திலிருந்தே விட்டுவைக்கவில்லை.

     ஸ்ரீ சோராப்ஜி அடாஜணியா மிக்க  புத்திக் கூர்மை உள்ளவர்.
அவர் என்னை எச்சரிக்கை செய்தார்:  “அந்த ஆசாமி விஷயத்தில்
எச்சரிக்கையுடன் இருங்கள்.     நம் மீது ஆதிக்கம் செலுத்த அவர்
விரும்புகிறார் என்று தோன்றுகிறது.      அவர் கட்டளையை ஏற்று
நடக்க நாங்கள் தயாராயில்லை.       நமக்குப் போதிப்பவர் என்று
அவரை ஏற்றுக்கொள்ள         நாங்கள் தயார். ஆனால், நமக்குப்
போதிப்பதற்கென்று அவர் நியமித்திருக்கும்       இளைஞர்கள்கூட,
நமக்குத் தாங்கள் எஜமானர்களாக        வந்திருப்பதாக எண்ணிக்
கொள்ளுகின்றனர்” என்றார்.

     அந்த இளைஞர்கள்            ஆக்ஸ்போர்டு மாணவர்கள்.
எங்களுக்குச் சொல்லிக் கொடுக்க வந்திருந்தனர்.  அந்தத் தலைமை
அதிகாரி, அவர்களை எங்கள்       படைப்பிரிவின் தலைவர்களாக
நியமித்தார்.

     தலைமை அதிகாரியின்     மிதமிஞ்சிய செய்கைகளை நானும்
கவனிக்காமலில்லை. என்றாலும்,          அதைப் பற்றிக் கவலைப்
படவேண்டாமென்று               சோராப்ஜியிடம் கூறி அவரைச்
சமாதானப்படுத்த            முயன்றேன். ஆனால், அவர் எளிதில்
சமாதானமடைந்து விடுகிறவர் அல்ல.

     “நீங்கள் எல்லோரையும் நம்பிவிடுகிறீர்கள்.இவர்கள்   பசப்புப்