பக்கம் எண் :

நோய்க்குச் சிகிச்சை 431

Untitled Document
‘மால்ட்டட் மில்க்’ சாப்பிடலாம்         என்று யாரோ ஒரு நண்பர்
அவருக்குக் கூறினார். அதில்     பால் கலப்பே கிடையாது என்றும்,
பால் சத்து இருக்கும்  வகையில் ரசாயன முறையில் அது தயாரிக்கப்
பட்டது என்றும், உண்மையை        அறியாமலேயே அந்த நண்பர்
அவருக்கு உறுதி கூறிவிட்டார். லேடி செஸிலியா,       என்னுடைய
சமயக் கொள்கை சம்பந்தமான நம்பிக்கைகளை    மதித்து நடப்பவர்
என்பதை அறிவேன். ஆகவே, அவர்       சொன்னதை அப்படியே
நம்பிவிட்டேன். அந்தப் பொடியை நீரில் கலந்து சாப்பிட்டேன். அதன்
சுவை பாலின் சுவை போன்றே இருக்கக் கண்டேன். பிறகு புட்டியின்
மீது ஒட்டியிருந்த சீட்டில் எழுதியிருந்ததைப் படித்துப்   பார்த்தேன்.
பாலிலிருந்து தயாரிக்கப் படுவதே அது       என்பதை அறிந்தேன்.
சாப்பிட்ட பிறகுதான் இதெல்லாம் தெரிந்தது.      ஆகவே, அதைச்
சாப்பிடுவதை விட்டு விட்டேன்.

     நான் கண்டுபிடித்துவிட்டதைக்  குறித்து லேடி செஸிலியாவுக்கு
அறிவித்து அதைப் பற்றிக்        கவலைப்பட வேண்டாம் என்றும்
கேட்டுக் கொண்டேன். அவரோ, தமது   வருத்தத்தைத் தெரிவித்துக்
கொள்ள விரைந்தோடி வந்தார். அவருக்குச்      சொன்ன நண்பர்,
புட்டிமீது ஒட்டியிருந்த சீட்டைப்      படித்துப் பார்க்கவே இல்லை.
இதைக் குறித்து கவலைப்படவே வேண்டாம் என்று அவரை  மிகவும்
வேண்டிக் கொண்டேன். எவ்வளவோ சிரமப் பட்டுத் தேடிக்கொண்டு
வந்தவைகளை நான் பயன்படுத்திக்    கொள்ள முடியாமைக்கு என்
வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டேன். தெரியாததனால் தவறாகப்
பால் சாப்பிட்டு விட்டதற்காக, குற்றம்     செய்து விட்டதாக எண்ணி
நான் வருத்தப் படவில்லை என்றும் அவருக்கு உறுதி கூறினேன்.

     லேடி செஸிலியாவுடன் ஏற்பட்ட  தொடர்பைப் பற்றிய மற்றும்
பல இனிய ஞாபகங்களெல்லாம் உண்டு. அவற்றையெல்லாம் கூறாமல்
மேலே செல்ல வேண்டியவன்           ஆகிறேன். எத்தனையோ சோதனைகளுக்கும் ஏமாற்றங்களுக்கும்   இடையே எனக்குப் பெரும்
ஆறுதல் அளிப்பவர்கள் ஆக இருந்து வந்த அநேக  நண்பர்களைப்
பற்றி நான்          எண்ணிப் பார்க்க முடியும். இவ்விதம் கடவுள்,
துயரங்களையும்          இன்பமானவைகளாக்கி விடுகிறார். இதில்
நம்பிக்கையுள்ளவர்கள்,       கருணைக் கடலான கடவுளின் அந்த
அருளையே அந்நண்பர்களிடமும் காண்பார்கள்.

     டாக்டர் அல்லின்ஸன் அடுத்த முறை என்னைப் பார்க்க வந்த
போது, ஆகாரத்தில்எனக்கு விதித்திருந்த     கட்டுத் திட்டங்களைத்
தளர்த்தி விட்டார்.  கொழுப்புச்சத்துக்காக நிலக்கடலை, வெண்ணெய்
அல்லது ஆலிவ் எண்ணெய்         சேர்த்துக் கொள்ளும் படியும்,
கறிகாய்களைச் சமைத்து, நான் விரும்பினால் அரிசிச்